உங்கள் வீட்டில் கட்டுகாட்டாக பணம் சேர பீரோவை இந்த திசையை நோக்கி வையுங்கள்!.. குபேரரே உங்கள் வீட்டில் தான் இருப்பார்!…
என்னதான் கோடி கோடியாய் செலவு செய்து வீட்டை காட்டினாலும் வீட்டில் வாஸ்து சரியில்லை என்றால் கஷ்டம் தான் ஏற்படும்.அதற்கு தான் பெரியவர்கள் எல்லாவற்றையும் வாஸ்துபடி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
பொதுவாகவே ஒருவர் புதியதாக வீடு கட்டினால் அந்த வீட்டில், வாசல், சமையலறை, குளியல் அறை, படுக்கை அறை என அனைத்தும் எந்தெந்த திசையில் இருக்க வேண்டும் என பார்த்து கட்டுகிறார்கள். நாம் இவ்வாறு வாஸ்து சாஸ்திரங்களை கடைபிடிப்பதின் மூலம் அது நமது குடும்பத்திற்கு நன்மையையும், மகிழ்ச்சியையும் தருகிறது.
இந்த வாஸ்து சாஸ்திரங்கள்படி நம் வீட்டில் வைக்கும் பொருள்களை சரியான திசையை பார்த்தவாறு சரியான இடத்தில் வைத்தால் அது நமக்கு நன்மை பயக்கும். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கும் பீரோவை சரியான திசையில் நோக்கி வைத்தால் பணம் தானாகவே வீடு தேடி வரும்.
நாம் வீட்டில் வைக்கும் பீரோவை தென்மேற்கு திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும். பீரோவின் பின்புறம் தெற்கு திசை நோக்கியும் முன்புறம் வடக்கு திசை நோக்கியும் வைக்க வேண்டும். அப்படி நீங்கள் பீரோ வைக்கும் போது சுவர்க்கும் பீரோவுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்குமாறு பார்த்து வைக்க வேண்டும். இப்படி வைக்கும்போது வீட்டிற்கு பண வரத்து அதிகரிக்கும். நீங்கள் பீரோவை வடமேற்கு திசையை பார்த்து வைத்திருந்தால் உங்களது வீட்டில் நீங்கள் செய்யும் செலவுகள் அதிகரித்து நிறைய கடன் வாங்கும் பிரச்சனை வர வாய்ப்புள்ளது.