முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இளைஞர்களுக்கு MY Bharat இணையதளம்...! 1.45 கோடிக்கும் அதிகமானோர் பதிவு...!

09:06 AM Feb 05, 2024 IST | 1newsnationuser2
Advertisement

எனது இளைய பாரதம் (MY Bharat) தளம் 31.01.2024 நிலவரப்படி 1.45 கோடிக்கும் அதிகமான பதிவுகளுடன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பயனர் நட்பு இடைமுகம் காரணமாக இது சாத்தியமானது ஆக்கப்பூர்வமான மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை நோக்கி நாட்டின் இளைஞர்களை அணிதிரட்டுவதில் இந்த இணையதளம் ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

2023, அக்டாபர் 31-ந் தேதி, தேசிய ஒற்றுமை தினத்தன்று, புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் நாட்டின் இளைஞர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி 'எனமது இளைய பாரதம் (MY Bharat)' தளத்தை தொடங்கி வைத்தார். இளைஞர்களின் விருப்பங்களை நனவாக்கவும் அதிகாரமளிப்பதற்கும், "வளர்ச்சியடைந்த பாரதம்" உருவாக்கத்திற்கு பங்களிப்பதற்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதற்கான முக்கிய குறிக்கோளுடன், இளைஞர் மேம்பாடு மற்றும் இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான, தொழில்நுட்பம் சார்ந்த வசதி வழங்கும் தளமாக மை பாரத் தளம் கருதப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மை பாரத் தளத்தில் (https://www.mybharat.gov.in/) பதிவு செய்து, தளத்தில் கிடைக்கும் பல்வேறு வாய்ப்பு வசதிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Advertisement
Next Article