”இனி எங்கும் அலைய தேவையில்லை”..!! வீட்டில் இருந்தே பட்டாவை மாற்றலாம்..!! எப்படி தெரியுமா..?
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் நினைப்பது நமக்கென்று ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது தான். அப்படி மற்றவரிடம் இருந்து சொந்த வீடுகள் வாங்குபவர்கள், உடனடியாக பத்திரத்தை தனது பெயருக்கு மாற்றுவது உண்டு. அதுமட்டுமின்றி, சொத்தின் பட்டாவை மாற்றுவது அவசியம் என்பதால் இ-சேவை மையங்கள் அல்லது பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று பட்டாவை மாற்ற வேண்டும். ஆனால், இனி, நீங்கள் சொத்து பட்டாவை மாற்ற வேண்டுமென்றால், வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
* முதலில் பட்டா மாற்றக்கோரி விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான https://eservices.tn.gov.in/வை பார்வையிடவும்.
* பின்னர், ”பட்டா மாறுதல் விண்ணப்பிக்க” என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
* உங்கள் மொபைல் நம்பர் கொடுத்தவுடன், OTP வரும். அதை உள்ளிடவும்.
* பின்னர், உட்பிரிவு பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என காண்பிக்கப்படும். அதில், உங்களுக்கு என்ன தேவையோ அதை தேர்வு செய்ய வேண்டும்.
* பட்டா மாற்ற தேவையான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவே நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
* மேலும், செட்டில்மென்ட் பத்திரம், கிரைய பத்திரம், தான பத்திரம், பரிவர்த்தனை பத்திரம் உள்ளிட்டவற்றின் ஏதேனும் ஒன்றை 3 MB-க்கு மிகாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* மாவட்டம். கிராமம், தாலுகா, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவாளர் அலுவலகம், பரிவர்த்தனை வகை மற்றும் ஆவண பதிவு எண் ஆகியவற்றின் விவரங்களை உள்ளிட வேண்டும்.
* இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.60-யை செலுத்த சம்மதமா? என்று கேட்கும். அதற்கு சம்மதம் என்பதை கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் நிறைவேற்றப்படும் போது உங்கள் மொபைலுக்கு eஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும்.