For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்த நாடுகளில் 'UPI' மூலம் இந்தியர்கள் பணம் செலுத்தலாம்.!

03:56 PM Feb 19, 2024 IST | 1newsnationuser7
இந்த நாடுகளில்  upi  மூலம் இந்தியர்கள் பணம் செலுத்தலாம்
Advertisement

UPI என்பது யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் ஆகும். இது டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுகிறது. இந்த முறையை பயன்படுத்தி செல்போனின் மூலமாக நாம் பேமெண்ட்கள் செய்வதற்கும் பணம் அனுப்புவதற்கும் உதவுகிறது. இந்த சேவையை கூகுள் பே பேடிஎம் அமேசான் பே போன்ற நிறுவனங்களின் செயலி மூலம் பயன்படுத்தலாம்.

Advertisement

யுபிஐ சேவையை நேஷனல் பேமன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் நிர்வாகித்து மற்றும் கண்காணித்து வருகிறது. உள்நாடுகளில் பணப்பரிவர்த்தனை மற்றும் வணிகரீதியிலான பேமெண்ட் களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த முறை தற்போது வெளிநாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சேவையின் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் நாம் இந்திய பணத்தை மாற்றி செலவு செய்ய வேண்டியது இல்லை. ஆன்லைன் மூலமாக யு.பி.ஐ முறையில் பண பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.

இந்தியாவின் யுபிஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை சிங்கப்பூர் இலங்கை மொரிசியஸ் யுஏஇ பூட்டான் நேபாளம் மற்றும் பிரான்ஸ் ஆகிய 7 நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. யுபிஐ மூலம் வெளிநாடுகளில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வது முதல் முதலாக பூட்டான் நாட்டில் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளிலும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது இலங்கை மற்றும் மொரிசியஸ் நாடுகளிலும் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் தங்களது யுபிஐ சேவையின் மூலமாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இது தொடர்பாக BHIM வெளிநாடுகளில் உள்ள வங்கிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த சேவையை வழங்கி வருகிறது. பிரான்ஸ் நாட்டில் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பொருட்டு அந்த நாட்டில் இருக்கும் லைரா என்ற நிறுவனத்துடன் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறது. இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் இனி டிஜிட்டல் முறையில் தங்களது பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

English summary: There are 7 countries Indians can use UPI for digital payments. SriLanka and France are recently added to the list.

Tags :
Advertisement