முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ZOHO-வில் புதிய வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி நியமனம்..! மிஸ் பண்ணாதீங்க

Zoho, one of the leading IT companies in Tamil Nadu, has announced a new job vacancy. Candidates will be posted in Chennai. Eligible and willing candidates can apply immediately and apply
01:55 PM Oct 18, 2024 IST | Mari Thangam
Advertisement

தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோவில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

Advertisement

பணியிடங்கள் : ஜோஹோ நிறுவனத்தில் Cloud Operations Engineer பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.

என்னென்ன தகுதி : விண்ணப்பம் செய்ய விரும்புவோர் இந்த பணியில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சமாக 5 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி லினக்ஸ் ஓஎஸ் (Linux OS), Cloud Infrastructure-களில் Virtualization, Load Balancers உள்ளிட்டவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

இன்ஃப்ராஸ்டெக்ச்சர் காம்போனென்ட்ஸ் என அழைக்கப்படும் DNS, DHCP, NTP, Proxy, OS Image Servers, Load Balancers ஆகியவற்றை மேனேஜ்மென்ட் செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஆட்டோமேஷன் மற்றும் பேக்கேஜ் மேனேஜ்மென்ட் பணிகளுக்காக ஓபன் சோர்ஜ் ஆட்டோமேஷன் டூல்ஸ்களான Puppet மற்றும் Ansible பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

வெப் சர்வர்களான Apache/Nginx பற்றி அறிந்திருக்க வேண்டும். நெட்வோர்க்கிங் கான்ஸ்செப்ட்டுகளான VLAN, NAT, ARP, Firewall மற்றும் ஸ்வீட்ச் கான்பிகரேஷன் உள்ளிட்டவற்றின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். அடிப்படை நெட்வொர்க்கிங் கான்செப்ட்ஸ்களான VLAN, NAT, ARP, basic FW உள்ளிட்டவற்றை தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் Shell/Python ஸ்கிரிப்ட் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். சர்வர் ஹார்ட்வேர்களான சிபியூ, RAM, டிரைவ்ஸ், இன்டனல் டிசைன் மற்றும் Saas காம்பேனென்டஸ் RDBMS, NoSQL, Hadoop பற்றி தெரிந்திருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும்.

பணி விவரம் : பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். சம்பளம் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படாததால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லதாகும்.

Read more ; தீபாவளி பண்டிகை..!! பட்டாசு வெடிக்க இதுதான் நேரம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Tags :
Chennaiit companiesJob vacancyTamil NaduZOHO
Advertisement
Next Article