For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"தை பிறந்தால் வழி பிறக்கும்" தை மாதத்தில் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.!?

06:43 AM Jan 17, 2024 IST | 1newsnationuser5
 தை பிறந்தால் வழி பிறக்கும்  தை மாதத்தில் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது
Advertisement

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அந்த வகையில் தை மாதம் பிறந்தவுடன் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகுது என்பதை குறித்தும் பார்க்கலாம்? தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சூரிய பகவான் இடம்பெயர்ந்துள்ளதால் ஒரு சில ராசியினருக்கு தை மாதத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

Advertisement

மேஷம்: இதுவரை தொழிலில் ஏற்பட்ட மந்தநிலை குறைந்து தொழில்துறையில் மிகச் சிறப்பான மாற்றம் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேஷ ராசியினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு இந்த மாதம் சவால்கள் நிறைந்த மாதமாக இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். திருவண்ணாமலை சென்று தரிசனம் செய்தால் மன அமைதியை ஏற்படுத்தும்.

மிதுனம்: தொழிலில் கூட்டாளிகளையும், பணி புரியும் இடத்தில் இருப்பவர்களையும் அனுசரித்து சென்றால் நன்மைகள் ஏற்படும். பூர்விக சொத்து பிரச்சனை நீங்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்க வேண்டும்.

கடகம்: புதிய முயற்சிகளில் தொடர்ந்து சவால்கள் ஏற்பட்டாலும் நல்லபடியாக காரியம் முடியும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தினசரி கடவுளை வழிபடுவது மன அமைதியை ஏற்படுத்துவதோடு ஆரோக்கியத்தையும் தரும்.

சிம்மம்: உடல் நலனில் அக்கறை தேவை. குடும்பங்களில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். சண்டே சச்சரவுகளில் தலையிட வேண்டாம். உழைப்புக்கு ஏற்ற வாய்ப்புகள் பெருகும். பங்குச்சந்தை வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கன்னி: பல எதிர்ப்புகளை தாண்டியும் எடுத்த காரியத்தில் கண்டிப்பாக வெற்றி நிச்சயம். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். இதுவரை இருந்த தடைகள் நீங்கி சிறப்பான மாதமாக தை மாதம் அமையும்.

துலாம்: உழைப்புக்கேற்ற ஆதாயம் கண்டிப்பாக கிடைக்கும் பூர்விக சொத்துக்களில் பிரச்சனைகள் நீங்கி பலன் கிடைக்கும். சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்: விட்டுக் கொடுத்து போவது குடும்பத்திற்கு நன்மையை ஏற்படுத்தும். தொழிலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வீண்வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு: உடல்நல குறைபாடு ஏற்படலாம். பூர்வீக சொத்து பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு முயற்சி செய்ய வேண்டாம். நண்பர்களால் பிரச்சனைகள் வரலாம். பிரச்சினைகளில் இருந்து தள்ளி இருப்பதே நலம்.

மகரம்: எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றி நிச்சயம். புதிய வீடு வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு. பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

கும்பம் : சேமிப்பில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உருவாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடைபெறும். பணியிடத்தில் பதிவு உயர்வு கிடைக்கும். உடல் நல குறைபாடுகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

மீனம்: இதுவரை செய்து முடிக்க முடியாத காரியங்கள் இந்த மாதம் செய்து முடிப்பீர்கள். தொழிலில் லாபம் பெருகும். பணியிட மாற்றம் ஏற்படும். வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும்.

Tags :
Advertisement