2024இல் பண மழை கொட்டப்போகும் ராசிக்காரர்கள்..!! உங்களுக்கும் அந்த யோகம் இருக்கான்னு பாருங்க..!!
பொதுவாகவே புத்தாண்டின் போது 12 ராசிகளில் இருக்கும் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது, ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். இதனால், சில ராசிகளுக்கு அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்புகளும் வந்து சேரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இயல்பிலேயே கடினமாக உழைக்கும் திறன் இருக்கும். வருகின்ற ஆண்டு கிரக மாற்றங்கள் உங்களுக்கு சிறந்த சாதக பலனை கொடுக்கும். ரிஷப ராசிக்காரர்கள் சவால்களை சந்திப்பதில் கைதேர்ந்தவர்கள். இதனால் அடுத்த வருடம் பல வகைகளில் பல தொழில்களில் முதலீடு செய்து வருவாய் ஈட்டும் வாய்ப்பு காணப்படுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களும் 2024இல் நிதி வரவு போதும் எனும் அளவுக்கு இருக்கப் போகிறது. அவர்களின் ஒழுக்கமான இயல்பு செல்வத்தைக் குவிப்பதற்கும் நிதிச் செழிப்பை அடைவதற்கும் துணைப்புரிகிறது. அடுத்த ஆண்டு இவர்களை செல்வம் தேடி தரும்.
சிம்மம்
இந்த ராசியினர் சிங்கத்தை போலவே அதன் கம்பீரம் மற்றும் தைரியம் போன்ற திறன் உடையவர்களாக இருப்பர். பிறரை கவரக்கூடிய கவர்ச்சிகரமான இயல்பு, மற்றவர்களை இவர் பேச்சை கேட்க வைக்கும் வகையில் இருக்கும். இந்த ராசியை சேர்ந்த பலர், உயர்வான இடத்தில் இருப்பர். தன்னம்பிக்கை, தைரியம் என அனைத்தும் இவர்களுக்குள் இயற்கையாகவே இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பண ரீதியாக எடுத்து வைக்க இருக்கும் ஒவ்வொரு அடியும் இனி வெற்றிதான். அவர்களின் உன்னிப்பாக கவனிக்கும் திறன் புத்திசாலித்தனமான முதலீட்டுத் தேர்வுகளைச் செய்ய அவர்களுக்கு உதவும். இவர்களுக்கு பல்வேறு நிதி முயற்சிகளின் அபாயங்கள் மற்றும் அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் தெரியும். எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும் அது குறித்து தீர ஆராய்ந்த பின்னரே எடுப்பர்.
விருச்சிகம்
இந்த ராசிக்காரர்கள், வருகின்ற ஆண்டு ஏராளமான செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்க வாய்ப்புள்ளது. அவர்களின் உறுதியான மற்றும் வளமான இயல்பினால் நிறைய செல்வங்களைக் குவிப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளது.