குட்டீஸ் ஸ்பெஷல்: நாக்கில் பட்டதும் கரையும் தித்திப்பான கருப்பட்டி வட்லப்பம் ரெஸிபி.!
உணவு வகைகளில் இனிப்பு பண்டங்களுக்கு என்று எப்போதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் தமிழகத்தின் பாரம்பரியமான கருப்பட்டியை கொண்டு சுவை மற்றும் சத்து நிறைந்த கருப்பட்டி வட்டலப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதன் செயல்முறை மிகவும் எளிது. இந்த வட்டலப்பம் செய்வதற்கு 3 முட்டை, 1 கப் கட்டியான தேங்காய் பால் மற்றும் 1 1/4 கப் கருப்பட்டி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை கொட்டி ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளவும் இவற்றுடன் 1 கப் தேங்காய் பால் மற்றும் 1 1/4 கப் கருப்பட்டி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இவை அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்த பின் சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து ஒரு டிபன் பாக்ஸில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் டிபன் பாக்ஸை மூடி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் ஸ்டீம் செய்து எடுத்தால் சுவையான கருப்பட்டி வட்டலப்பம் ரெடி. இதில் பாத்திரத்திற்கு பதிலாக இட்லி கொப்பரையையும் பயன்படுத்தலாம்.