For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யூடியூபர் சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு சீல்...! காவல்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை...!

06:00 AM May 11, 2024 IST | Vignesh
யூடியூபர் சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு சீல்     காவல்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
Advertisement

சென்னை தி நகரில் இயங்கி வந்த சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிக்கு சவுக்கு சங்கர் கொடுத்த நேர்காணலில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருக்கிறார். இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 4-ம் தேதி தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது ஐந்து பிரிவுகள் என் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான ஆவணங்களைத் தயாரித்து அவற்றைப் பரப்பியதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர காவல்துறை மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளது. நகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவின் (சிசிபி) சைபர் கிரைம் பிரிவு ஐபிசியின் பிரிவுகள் 466 (போலி), 471 (போலி ஆவணத்தைப் பயன்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக, பிப்ரவரியில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இரண்டு தொழில்நுட்ப ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நகர காவல்துறையை அணுகியது, அவர்கள் பத்திரிகைகளுக்கு 'அதிகாரப்பூர்வ தகவல்களை கசியவிட்டதாக' கூறினர்.

சவுக்கு சங்கர் அலுவலகம் ரெய்டு

சவுக்கு சங்கர் காரில் கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தேனி மாவட்ட தனிப்படை போலீசார் நேற்று சென்னை தி நகரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சவுக்கு சங்கரின் தி நகர் அலுவலகத்தில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தற்பொழுது தகவல்கள் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சவுக்கு சங்கரின் அலுவலகம் மற்றும் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :
Advertisement