முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கஞ்சா வழக்கில் கைதான சவுக்கு சங்கர்.. மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்..!!

YouTuber savukku Shankar, who was arrested in Chennai, appeared before the Madurai Anti-Narcotics Special Court.
01:05 PM Dec 18, 2024 IST | Mari Thangam
Advertisement

சென்னையில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

Advertisement

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது, அவரது கார் மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்டோரிடம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

குறிப்பாக அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 6 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு, கடந்த ஜூலை மாதம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விசாரணையின் போது சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக ஆஜராகாதது குறித்து அவரது வழக்கறிஞர் மனு அளித்தார். அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி செங்கமலச்செல்வன், சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, சவுக்கு சங்கர் நேற்றைய தினம் சென்னையில் கைது செய்யப்பட்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மதுரை போதைப்போருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்யப்பட்டார். போலீசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.

Read more ; சப்பாத்தியை நேரடியாக தீயில் சமைப்பதால் புற்றுநோய் ஏற்படுமா..? நிபுணர் விளக்கம்..

Tags :
Madurai Anti-Narcotics Special Court.YouTuber savukku Shankar
Advertisement
Next Article