முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மருத்துவ சட்டங்களை மதிக்கிறேன்.. எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ வெளியிடவில்லை..!! - இர்ஃபான் விளக்கம்

YouTuber Irrfan has given an explanation to the notice sent by the Tamil Nadu Medical Department seeking an explanation regarding the matter of cutting the umbilical cord of his child.
12:30 PM Oct 26, 2024 IST | Mari Thangam
Advertisement

தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவத் துறை அனுப்பிய நோட்டீஸ்-க்கு யூடியூபர் இர்ஃபான் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

பிரபல யூடியூபர் இர்ஃபான் அண்மையில் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டிற்கு சென்று சட்டவிரோதமாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவும் இர்ஃபான் யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் அண்மையில் இர்ஃபான் தன்னுடைய குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது தொடர்பான வீடியோ ஒன்றை அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விளக்கம் கேட்டு, ஊரக நலப்பணி துறை இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பியது.  மேலும் யூடியூப் சேனலில் இருந்து அந்த வீடியோவை நீக்க வேண்டும் என மருத்துவத்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து யூடியூபர் இர்ஃபான் விளக்கக் கடிதம் கொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், 'எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை; மருத்துவ சட்டங்களை மதிக்கிறேன்' என தெரிவித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராமமூர்த்தியிடம் கடிதம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலம் தனது தரப்பு வருத்தத்தை யூடியூபர் இர்ஃபான் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read more ; ராணுவ பப்ளிக் பள்ளிகளில் ஆசிரியர் வேலை.. கை நிறைய சம்பளம்..!! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Tags :
Chennaicutting the umbilical cordMedical lawTamil Nadu Medical DepartmentYouTuber Irrfan
Advertisement
Next Article