முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரபல யூடியூபர் ஏற்பாடு செய்த பார்ட்டியில், பாம்பு விஷம்.! 5 பேர் கைது.!

04:14 PM Feb 19, 2024 IST | 1newsnationuser4
Advertisement

டெல்லியில் பிரபல யூடியூபர் ஏற்பாடு செய்த பார்ட்டியில், பாம்புகள் மற்றும் அதன் விஷத்தை விநியோகித்ததாக பரபரப்பு புகார் நொய்டா காவல்துறைக்கு கொடுக்கப்பட்டது. காவல்துறைக்கு கிடைத்த மாதிரிகளில், பாம்பின் விஷம் இருப்பதை, ஜெய்ப்பூரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகம் உறுதி செய்துள்ளதை அடுத்து, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

டெல்லியைச் சேர்ந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ், தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை எடுப்பதற்காக பாம்புகளை பயன்படுத்தி வந்துள்ளார். டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவர் பார்ட்டிகளை ஏற்பாடு செய்து வந்துள்ளார்.

இவர் அளித்துள்ள பார்ட்டிகளில் பல வெளிநாட்டினர்களும் கலந்து கொண்டதாக தெரியவந்தது. இந்தப் பார்ட்டிகளில் கலந்து கொண்டவர்கள், பாம்பின் விஷத்தை உட்கொண்டுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. PFA புகார் அளித்ததன் பேரில் 6 நபர்களின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்விஷ் யாதவை தவிர மற்ற 5 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து 5 நாகப் பாம்புகள் உட்பட ஒன்பது பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் விஷமும் கைப்பற்றப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பாம்புகளை வனத்துறையிடம் ஒப்படைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

English summary: Famous Youtuber has been accused of supplying snake venom in the rave parties that he has arranged. 5 people were arrested regarding this issue.

Read more: TN BUDGET 2024 : அகழ்வாராய்ச்சிக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு.! இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம்.!| 1newsnation

Tags :
DelhiElvish yadavinstagrampolice arrestRave partysnake venomYoutuber
Advertisement
Next Article