முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மே 17-ம் தேதி வரை யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சிறை...! கோவை நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

05:50 AM May 05, 2024 IST | Vignesh
Advertisement

சவுக்கு சங்கரை மே 17-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சமூக வலை தளங்களில் தமிழக அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார் யூடியூபர் சவுக்கு சங்கர். முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றிக்கு சவுக்கு சங்கர் நேர்காணலில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் நேற்று அதிகாலையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவை சைபர் கிரைம் காவல் துறை அலுவலகத்திற்கு தேனியில் இருந்து காவல் துறையினர் அழைத்து சென்றனர்.

அவர் மீது ஐந்து பிரிவுகள் என் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். நேற்று மாலை சவுக்கு சங்கருக்கு கோவையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதையடுத்து சவுக்கு சங்கரை மே 17 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் .

Advertisement
Next Article