Youtube முன்னாள் சி.இ.ஒ மகன் மர்ம மரணம்.! போதைப் பொருளின் காரணமா.? வெளியான அதிர்ச்சி தகவல்.!
'Youtube' முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தி உள்ளனர். 'youtube' நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ சூசன் வோஜ்சிக்கியின் 19 வயது மகன் மார்கோ ட்ரோப்பர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
இந்நிலையில் இந்த வார இறுதியில் தனது பல்கலைக்கழகத்தின் தங்கும் இடத்தில் மார்கோ ட்ரோப்பர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.UC பெர்க்லி வளாகத்தில் உள்ள கிளார்க் கெர் தங்கும் விடுதியில் சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்ட மார்க்கோ ட்ரோப்பருக்கு முதுளுதவி மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைகள் அளித்து தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்கும் என்றனர். எனினும் அவர் சுயநினைவு திரும்பாமல் ஏன் மரணமடைந்தார்.
தற்போது வரை அவரது மரணத்திற்கான காரணங்கள் குறித்து தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றச் செயல் நடந்ததற்கான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் காவல்துறையை அறிவித்துள்ளது. அதிகமான போதை பொருந்து உபயோகத்தில் தனது பேரன் இறந்திருக்கலாம் என , ட்ரோப்பரின் பாட்டி, எஸ்தர் வோஜ்சிக்கி தெரிவித்துள்ளார்.
அவர் சில மருந்துகளை உட்கொண்டு வந்தார் அதில் என்ன கலந்திருந்தது என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் அது போதைப்பொருள் என்பது மட்டும் தெரியும் என்று எஸ்தர் வோஜ்சிக்கி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். மேலும் தனது பேஸ்புக் பதிவு ஒன்றில் பேரனை "அன்பானவர்" மற்றும் "கணித மேதை" என பதிவு செய்து இருக்கிறார்.
ட்ரோபர் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் கணிதத்தை முதன்மை பாடமாக எடுத்து படித்து வந்தார். தற்போது இரண்டாவது செமஸ்டர் படித்து வந்த நிலையில் அவரது மரணம் சம்பவித்திருக்கிறது. அவரது தங்கும் இடத்தில் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கூட்டம் இருந்தது. தனது படிப்பிலும் சமூக வாழ்விலும் செழித்து வளர்ந்ததாகத் தோன்றியது. தனது பேரனை மிகவும் அன்பானவர் எனக் குறிப்பிட்ட எஸ்தர் அவரது கல்வி மற்றும் சமூக வாழ்வு நன்றாக அமைந்திருந்ததாக தெரிவித்தார். எல்லாம் சிறப்பாக சென்று கொண்டிருந்த இந்த வேளையில் நிகழ்ந்த அவரது மரணம் தங்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது என தனது பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
English Summary: Youtube former ceo susan wojcicki's son found dead at berkley university accommodation. reason for the death is unknown