'20' நிமிடங்களுக்கு மேல் செயல் இழந்த YouTube.! நடந்தது என்ன.?
இன்று இந்திய நேரப்படி மூன்று மணியளவில் youtube வலைதளம் 20 நிமிடங்களுக்கு மேல் செயல் இழந்திருக்கிறது. இது தொடர்பாக 100 பேர் வரை புகார் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் வலைதள ஊடகமான youtube இன்று இந்திய நேரப்படி 3 மணி அளவில் 20 நிமிடங்களுக்கு முடங்கியதாக பல பயனர்களும் புகார் தெரிவித்துள்ளனர். யூடியூப் வலைதளம் சில நிமிடங்கள் முடங்கியதை தொடர்ந்து நிகழ் நேர செயலிழப்பை கண்காணிக்கும் டவுன்டெக்டர் மற்றும் சமூக வலைதளங்களிலும் பல பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
டவுன்டெக்டரின் கூற்றுப்படி, 80 சதவீத பயனர்கள் வீடியோக்களைப் பார்ப்பதிலும் யூடியூப்பில் பதிவேற்றுவதிலும் மதியம் 3 மணிக்குள் சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கினர். இருப்பினும், யூடியூப்பின் இந்த சிக்கலை இந்திய பயனர்கள் மட்டுமே எதிர்கொள்கிறார்களா அல்லது உலகளாவிய பயனர்கள் எதிர்கொள்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இது தொடர்பாக பயனர்கள் மற்றும் யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்கள் சமூக வலைதளமான X தளத்தில் யூடியூப் தொடர்பான பிரச்சனை பற்றி பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் ஒருவர் யூடியூப் சர்வர் ஜெயலலிதா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா.? எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் அவரது குறும்படங்களை யூடியூப் சேனலில் பதிவேற்றிய போது அவரது சேனல் மற்றும் யூடியூப் ஸ்டுடியோவில் எதுவும் காட்டவில்லை என தெரிவித்துள்ளார்.