YouTube | அப்ளோடு செய்த வீடியோக்கள் மாயம்..!! பயனர்கள் கதறல்!! யூ-ட்யூபில் என்ன நடக்கிறது?
கடந்த சில நாட்களுக்கு முன் மைக்ரோசாப்ட் பிரச்சனை காரணமாக உலகம் முழுவதும் வங்கி சேவைகள், விமான சேவைகள், பங்கு சந்தைகள் முடங்கிய நிலையில் தற்போது யூடியூபில் திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அப்லோடு செய்த வீடியோக்கள் மாயமாகி விடுவதாகவும் கூறப்படுவது பயனர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
யூடியூப் பயனாளிகள் பலர் தங்களது சமூக வலைதள கணக்கில் பிரச்சனையை சந்தித்ததாக பதிவு செய்து வருகின்றனர். யூ-ட்யூபில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை? நாங்கள் ஏற்கெனவே அப்லோடு செய்த வீடியோக்களை காணவில்லை என்றும், பல வீடியோக்கள் அழிந்து விட்டன என்றும் பயனர்கள் குமுறுகிறார்கள். இந்தியாவிலும் இந்த பிரச்சினை பல பிரபல யூ-ட்யூபர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதே நேரத்தில் இந்த பிரச்சனை அனைவருக்குமே ஏற்பட்ட சிக்கல் கிடையாது என்றும் சிலருக்கு மட்டுமே இப்படியான பிரச்சனை உருவாகி இருப்பதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து யூடியூப் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிப்பதில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் மற்றும் யூடியூப் என அடுத்தடுத்து பிரச்சனை ஏற்பட்டு வருவது பயனாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more ; மனிதர்களின் மன அழுத்தம் நாய்களின் உணர்ச்சிகளை பாதிக்கும்!. ஆய்வில் தகவல்!