For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஹிந்தியை உலக மொழியாக மாற்றும் வகையில் இளைஞர்கள் செயல்பட வேண்டும்...! மத்திய அமைச்சர் கருத்து

Youth should work to make Hindi a global language...! Union Minister
10:09 AM Dec 08, 2024 IST | Vignesh
ஹிந்தியை உலக மொழியாக மாற்றும் வகையில் இளைஞர்கள் செயல்பட வேண்டும்     மத்திய அமைச்சர் கருத்து
Advertisement

ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்றும் வகையில், அந்த மொழியின் தூதர்களாக இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் கூறியுள்ளார்.

Advertisement

சென்னையிலுள்ள தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபையின் 83-வது பட்டமளிப்பு விழா அங்குள்ள மகாத்மா காந்தி பட்டமளிப்பு அரங்கில் நடைபெற்றது. விழாவில் பேசிய அவர், ‘’ ஹிந்தி மொழியில் ஒரு பெரும் சக்தி உள்ளது. ஹிந்தி உலக மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. உலக அளவில் அந்த மொழிக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்த மொழியில் ஒரு மனித நேயம் உள்ளது. அனைத்து இந்திய மொழிகளும், பாரதமாதாவின் காலடியில் பிறந்துள்ளன. அவை அனைத்தும் ஒன்றே. அவை தேசபக்தி மற்றும் மனித நேயத்தின் அடையாளங்களாகும் என்ற செய்தியை உலகுக்கு கொண்டு செல்ல வேண்டும்’ என்று கூறினார்.

இங்கு ஹிந்தி மொழியில் பட்டம்பெற்றுள்ள இளைஞர்கள் இந்த மொழியை உலக மொழியாக மாற்றும் வகையில் அதன் தூதர்களாகச் செயல்பட வேண்டும் என்று அவர்கேட்டுக் கொண்டார். ஹிந்தியை ஒரு நோக்கத்துடனும்,அர்ப்பணிப்புடனும் உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும். மனித குல நன்மைக்காவும், இம் மொழியின் பெருமைகளை, உலகில் எங்கு சென்றாலும், பரப்புவதில் இளைஞர்கள் ஈடுபடவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் மொழிகள் அதன் வலிமை என்பதையும், இந்தியாவின் பல மொழிகளும் நம்மை எப்படி ஒரே பாரதம் உன்னத பாரதம் என்று இணைக்கின்றன என்பதையும் நாம் உலக மக்களிடம் விளக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Tags :
Advertisement