நெல்லை: பயங்கரம்.! போலீஸ் ஸ்டேசனின் வாசலில் இளைஞர் வெட்டி கொலை .! உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு.!
நெல்லையில் காவல் நிலையம் முன்பு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி டவுன் கருப்பந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜு இவரது மகன் சந்தியாகு(27). நேற்று மாலை கருப்பந்துறை பகுதியில் அமைந்துள்ள புறக்காவல் நிலைய வாசலில் இவர் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மோட்டார் சைக்கிள் அங்கு வந்த கும்பல் இவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சந்தியாகு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர். ஆனால் உறவினர்கள் கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர துணை கமிஷனர் சரவணக்குமார் ஜங்ஷன் பகுதி உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் மற்றும் காவல் துறை உதவி ஆய்வாளர்கள் கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்ததை தொடர்ந்து உடலை எடுக்க உறவினர்கள் அனுமதித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்திருக்கிறது.