நிஃபா வைரஸால் இளைஞர் மரணம்..!! தொடர்பில் இருந்த 175 பேரின் நிலை..? கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!!
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக 175 பேர் கண்டறியப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா கால அச்சம் தற்போது நிபா வைரஸ் தொற்றால் உருவாகியுள்ளது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸால், 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், உடனடி பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேரளா அரசுக்கு மத்திய அரசும் அறிவுறுத்தியது. அதாவது, நிபா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்டோரின் குடும்பம், சுற்றுப்புறங்களில் ஆய்வு மேற்கொள்ளுதல், கடுமையாக தனிமைப்படுத்துதல் மற்றும் சந்தேக நபர்களை தனிமைப்படுத்துதல். ஆய்வகப் பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், நிபா வைரஸால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக 175 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 74 பேர் சுகாதாரத்துறை பணியாளர்கள் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்த 175 பேரில் 13 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இந்த 13 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Read More : மனைவியை வேறொருவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வற்புறுத்தும் கணவன்..!! என்ன காரணம் தெரியுமா..?