இளைஞர்களே எச்சரிக்கை..!! இதை தொடர்ந்து செய்தால் உங்களுக்கு காது கேட்காமல் போகும் அபாயம்..!!
உலகளவில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் காது கேளாமை அபாயம் குறித்து உலக சுகாதார அமைப்பு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், 12 முதல் 35 வயதுடைய 1 பில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் 2050ஆம் ஆண்டளவில் குறிப்பிடத்தக்க செவித்திறன் குறைபாட்டை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை செய்கிறது. இயர்போன்கள், இயர்பட்ஸ் சாதனங்களை அபாயகரமான அளவுகளில் பரவலாகப் பயன்படுத்துவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தற்போது, இந்த வயதினரைச் சேர்ந்த சுமார் 500 மில்லியன் மக்கள் ஏற்கனவே செவித்திறன் இழப்பை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. இவற்றில் 25% நபர்கள் அதிக ஓசையுடன் தனிப்பட்ட ஆடியோ சாதனங்களை நீண்டகாலமாக பயன்படுத்தியதே காரணமாகும். கூடுதலாக, பாதிக்கப்பட்டவர்களில் 50% நபர்கள் கிளப்கள், சினிமாக்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களில் உரத்த இசையை கேட்டுப் பழகி இந்தப் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட கேட்கும் சாதனங்களில் வழக்கமான ஒலி அளவுகள் 75 முதல் 136 டெசிபல்கள் வரை இருக்கும். இந்த செட்டிங்ஸை அதிக ஓசையுடன் மாற்றியமைக்கும் போது செவிப்புலன் ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் முன்னாள் காது மற்றும் தொண்டை சிறப்பு பேராசிரியரான டாக்டர் பிபி சர்மா, ஒரு நபருக்கு பாதுகாப்பான கேட்கும் அளவு 20 - 30 டெசிபல் வரை சாதாரண உரையாடலின் அளவு தான் என்று எச்சரித்தார். அதிக ஒசைகள் நீண்ட நேரம் வெளிப்படுத்துவது காதுகளில் உள்ள உணர்ச்சி செல்களை சேதப்படுத்தும். இது மீள முடியாத காது கேளாமைக்கு வழிவகுக்கும்.
செவித்திறன் இழப்பைத் தடுக்க, நம் பாடல் கேட்கும் தனிப்பட்ட சாதனத்தின் அளவை 75 - 105 டெசிபல்களுக்கு இடையே வைத்திருக்க வேண்டும். கேட்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது உலக சுகாதார அமைப்பு. ஒரு முறை காதில் சேதம் ஏற்பட்டால், அதைத் திரும்பப் பெற முடியாது என்பதால், இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தியுள்ளது.
Read More : இலவச மின்சாரம்..!! ஆப்பு வைக்கும் தமிழ்நாடு அரசு..!! அதிரடியாக பிறப்பித்த உத்தரவு..!!