For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்கள் PPF கணக்கு முடங்கிவிட்டதா?… மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி?… கூடுதல் சிறப்பு என்ன தெரியுமா?

12:15 PM Jan 13, 2024 IST | 1newsnationuser3
உங்கள் ppf கணக்கு முடங்கிவிட்டதா … மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி … கூடுதல் சிறப்பு என்ன தெரியுமா
Advertisement

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் மிகவும் பிரபலமான திட்டமாகும். இத்திட்டத்தில் பொதுமக்கள் அதிகமான அளவில் ஆர்வமுடன் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் இத்திட்டத்தில் இணைந்துள்ள சில முதலீட்டாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியவில்லை என்று கூறுகின்றனர். அதாவது அவர்களுடைய PPF கணக்கு மூடப்பட்டுவிட்டது.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் உங்கள் கணக்கை செயலில் வைத்திருக்க முடியும். ஆனால் சில காரணங்களால் உங்கள் PPF கணக்கு மூடப்பட்டால் நீங்கள் அதற்குக் கவலைப்படத் தேவையில்லை. உங்களுடைய PPF கணக்கை மிக எளிதாக ஆக்டிவேட் செய்ய முடியும். உங்களுடைய பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்ய விரும்பினால் முதலில் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். அந்த அபராதத் தொகை எவ்வளவு என்பது உங்கள் கணக்கில் எத்தனை ஆண்டுகள் பணம் செலுத்தவில்லை என்பதைப் பொறுத்து இருக்கும். ஆண்டுக்கு 50 ரூபாய் வீதம் அபராதம் செலுத்த வேண்டும்.

மூடப்பட்ட உங்கள் PPF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்ய உங்கள் வங்கி அல்லது தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு மீண்டும் கணக்கைத் தொடங்குவதற்கான படிவத்தை நிரப்ப வேண்டும். இது தவிர ஆண்டுக்கு ரூ. 50 அபராதம் செலுத்த வேண்டும். உதாரணமாக, உங்கள் PPF கணக்கு மூடப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்டால் நீங்கள் 2000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இது தவிர, நீங்கள் ஆண்டுக்கு ரூ. 50 வீதம் ரூ. 200 டெபாசிட் செய்ய வேண்டும்.

PPF கணக்கில் வரி விலக்கு கிடைக்கும் என்பது இத்திட்டத்தில் உள்ள கூடுதல் சிறப்பு ஆகும். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சியின் கீழ், PPF திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வரி விலக்கின் பலனைப் பெறலாம். வட்டி வருமானம் மற்றும் முதிர்வின் போது பெறப்பட்ட தொகைக்கு நீங்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement