முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்களுடைய பான் கார்டு இனி யூஸ் ஆகாது..!! சிக்கலில் மாட்டிக்கிட்டீங்க..!! ஆர்டிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

08:55 AM Nov 09, 2023 IST | 1newsnationuser6
Advertisement

இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் ஆதார் எண்ணை குடிமக்களின் முக்கியமான ஆவணங்களுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. அதன்படி குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

Advertisement

இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்க முடியும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும் பணம் மோசடிகள் கண்டறிய உதவும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

நடப்பு ஆண்டு அபராதத்துடன் 2023ஆம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் தங்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்திய பிறகே பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியும்.

இந்நிலையில், இந்தியாவில் 70.24 கோடி பான் கார்டு வைத்திருப்பவர்கள் உள்ளனர், அவர்களில் 57.25 கோடி பேர் பான் கார்டுகளை ஆதாருடன் இணைத்துள்ளனர். 12 கோடிக்கும் அதிகமான பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும், அதில் 11.5 கோடி கார்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்புதகவல் அறியும் உரிமைச்சட்டம்மத்திய அரசுவருமான வரித்துறை
Advertisement
Next Article