16 வருடங்களாக, யாருக்கும் தெரியாமல் முடியை சாப்பிட்டு வந்த பெண்; சிகிச்சை அளித்த மருத்துவர் சொன்ன அதிர்ச்சி காரணம்..
உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம் கர்கைனா பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இவருக்கு தீராத வயிற்று இருந்துள்ளது. இதற்காக இவர் வீட்டிலேயே பல கை வைத்தியம் செய்து பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு சரியாகவில்லை. இதனால், அவர் அருகில் உள்ள சில தனியார் மருத்துவர்களிடமும் சென்று மருந்துகள் எடுத்துள்ளார். ஆனால் எந்த மருத்துவரிடம் சென்றும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அந்தப் பெண்ணின் குடும்பம், கடைசியாக பரேலி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்துள்ளனர். அப்போது தான் அந்தப் பெண்ணின் வயிற்றில் நிறைய முடி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் பெண்ணின் வயிற்றில் உள்ள முடியை அகற்ற முடிவு செய்தனர். இதையடுத்து, சில அடிப்படை பரிசோதனைகளுக்கு பிறகு, அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் மூலம், அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த சுமார் 2 கிலோ முடி அகற்றப்பட்டது.
இவ்வளவு முடி பெண்ணின் வயிற்றுக்குள் எப்படி சென்றது என சம்மந்தப்பட்ட பெண்ணிடம் கேட்டபோது, அவர் தன்னுடைய முடியை ரகசியமாக சாப்பிடும் பழக்கம் இருப்பதாக கூறியுள்ளார். சுமார் 16 வருடங்கள் அவர் தன்னுடைய முடியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சாப்பிட்டு வந்துள்ளார். இதைக் கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, இந்த பழக்கத்தில் இருந்து அவரை வெளியில் கொண்டு வர, அவருக்கு உளவியல் சிகிச்சை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறுகையில், “இளம்பெண், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதால், அவர் இப்படி முடியை சாப்பிட்டு வந்துள்ளார். இது சற்று சவாலான விசயம் தான். மிகவும் அரிதாகத்தான் இப்படிப்பட்ட பிரச்னைகளை பார்க்க முடியும். 5 பேர் அடங்கிய மருத்துவர் குழு அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளது. தொடர்ந்து அவரின் உடல் மற்றும் மனநிலையை கண்காணித்து வருகிறோம்” என்றனர்.
Read more: பெற்ற மகளுடன் 4 வருடம் உடலுறவு கொண்ட தந்தை.. விரக்தியில் மகள் எடுத்த முடிவு..