"வாங்க டா, நம்ம 3 பேரும் உல்லாசமா இருக்கலாம்" ஆசையாய் அழைத்த நண்பன்; வீட்டில் இருந்த தாய்க்கு நேர்ந்த சோகம்..
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 70 வயதான கீதா பூஷன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 45 வயதான ஜிதேந்திரா என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவர்களின் வீடு நீண்ட நேரம் ஆகியும் திறக்கவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, ஜிதேந்திராவும் அவரது தாய் கீதாவும் கேபிள் ஒயரால் கழுத்து நெரிக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இருவரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பல அதிர்ச்சி தகவல் வெளியானது. புத்தாண்டை கொண்டாட, ஜிதேந்திரா, தனது நண்பர்களான 19 வயதான சுபம் நாராயணன் மற்றும் மங்கேஷ் ஆகியோரை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். ஜிதேந்திரா வீட்டில் வைத்து, மூவரும் இணைந்து மது குடித்துள்ளனர்.
இதையடுத்து, ஜிதேந்திரா தனது நண்பர்கள் இருவர் உடனும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். இதனால் அவரது நண்பர்களான சுபம் நாராயணன் மற்றும் மங்கேஷ் ஆத்திரம் அடைந்துள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து ஜிதேந்திராவை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன் படி, இருவரும் சேர்ந்து ஜிதேந்திராவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதனைப் பார்த்த ஜிதேந்திராவின் தாய் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அவர்கள் கீதா பூசனையும் கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த பணம், நகை, மொபைல் போன்களை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர். இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
Read more: ”வேலியே பயிரை மேயலாமா?” புகார் அளிக்க வந்த பெண்ணை கழிவறைக்கு அழைத்து சென்று, டிஎஸ்பி செய்த காரியம்..