For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எச்சரிக்கை!!! இனி யாருக்கும் லிப்ட் கொடுக்க வேண்டாம்... கோவையை அதிர வைத்த சம்பவம்..

young-man-was-caught-in-trouble-by-the-man-who-asked-for-lift
05:07 PM Nov 19, 2024 IST | Saranya
எச்சரிக்கை    இனி யாருக்கும் லிப்ட் கொடுக்க வேண்டாம்    கோவையை அதிர வைத்த சம்பவம்
Advertisement

கோவை கணபதி பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம் போல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் வேலை முடிந்து இரவு 9 மணிக்கு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, சாலை ஓரத்தில் நின்ற நபர் ஒருவர் அவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். இதனால் அந்த இளைஞர் சாலையில் நின்றவரை தனது பைக்கில் ஏற்றி சென்றுள்ளார். ஒரு சில நிமிடங்களில், பின்னால் இருந்த நபர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து இளைஞரின் கழுத்தில் வைத்து, சத்தம் போட்டால் குத்திவிடுவதாகவும், தான் கூறும் இடத்திற்கு அழைத்து செல்லும்படியும் மிரட்டியுள்ளார்.

Advertisement

இதனால் பதறிப்போன இளைஞர், பின்னால் இருப்பவர் சொன்ன கணபதி அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு பயந்தபடியே இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அவர் சொன்ன இடத்தில், 5-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட கும்பல் நின்றுள்ளது. மேலும் அந்த கும்பல், வாலிபரிடம் நகை, பணத்தை கொடு, இல்லை என்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன இளைஞர், தன்னிடம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். அப்போது அந்த கும்பல், இளைஞரின் வாயில் மாத்திரை ஒன்றை போட்டு தண்ணீரை ஊற்றியது. இதனால் அந்த இளைஞருக்கு போதை ஏறியுள்ளது. பின்னர் அந்த கும்பல், உனது நண்பர்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஆன்லைனில் ரூ.50 ஆயிரம் அனுப்ப சொல் என்று கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த வாலிபர், அந்த கும்பல் சொன்னபடி செய்துள்ளார். இளைஞரின் நண்பர்கள் அனுப்பிய ரூ.20 ஆயிரத்தை அவரின் ஜிபே மூலம் ஸ்கேன் செய்து, அந்த பணத்தை தங்களின் வங்கி கணக்குக்கு அந்த கும்பல் மாற்றிக்கொண்டுள்ளனர். மேலும், வேறு ஒருவர், மற்றொரு வாலிபரை கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்திருக்கிறார். உடனே அந்த கும்பல், ரூ.20 ஆயிரத்தை பறித்த வாலிபரின் செல்போனை அவரிடம் கொடுத்துவிட்டு, புதிதாக வந்த வாலிபரிடம் பணம் பறிக்க சென்றது. உடனே அந்த வாலிபர் அந்தப்பகுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அந்த பகுதியில் மட்டும் ஒரே நாளில் 3 பேரிடம் இது போன்று பணம் பறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்மைக்காலங்களில் கோவையில் கணபதி மற்றும் சரவணம்பட்டி பகுதியில் இரவு 9 மணிக்கு மேல் லிப்ட் கேட்பது போல நடித்து இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இரவு நேரத்தில் தெரியாத நபருக்கு இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Read more: 2 ஆண்டுகளில் ரூ.1,74,000 சம்பாதிக்கலாம்! பெண்களுக்கான இந்த அசத்தல் திட்டம் பற்றி தெரியுமா?

Tags :
Advertisement