உஷார்!!! ஓடும் டாக்ஸியில் ஆடையை கழற்றி, வாலிபர் செய்த காரியம்..
தெற்கு மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் இளம் பெண் ஒருவர் படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஷேர் டாக்ஸியில் கல்லூரியில் இருந்து கிராண்ட் சாலை சென்றுள்ளார். அவர் சென்றது ஷேர் டாக்ஸி என்பதால், இளம்பெண் சென்ற டாக்சியில் ஏற்கனவே இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்துள்ளார். இந்த நிலையில் கல்லூரி மாணவியும் ஷேர் டாக்ஸியில் ஏறி அந்த இளைஞருடன் அமர்ந்துள்ளார். பின்னர், சிறிது தூரம் சென்ற பிறகு அந்த இளைஞர் தனது ஆடையை கழற்றி, கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார்.
இதனால் கல்லூரி மாணவி பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே, அந்த இளைஞர் செய்த காரியத்தை கல்லூரி மாணவி வீடியோவாக பதிவு செய்து, அதை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த இணைய வாசிகள், இளைஞரின் செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே மும்பை போலீசார் சம்பவம் தொடர்பாக கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட வீடியோ சார்ந்து வேறு ஏதும் ஆதாரம் இருந்தால் வழங்குங்கள் என்றும் கேட்டுள்ளது.
Read more: மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; தீப்பற்றி எறிந்த 4 வயது குழந்தை… நெஞ்சை பதைபதைக்கும் கொடூர சம்பவம்..