“முதலாளியுடன், மகளை தனியாக அனுப்பும் இடமா இது?”; இருட்டில் அலறிய 14 வயது சிறுமி…
சென்னையில் உள்ள ராயப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது தனது வீட்டில் வேலை செய்வதற்காக, கணவரை இழந்த பெண் ஒருவரை வைத்துள்ளார். வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு, 14 வயதான மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில், கணவன் இல்லாமல் வீட்டு வேலை செய்து மகளை வளர்க்கும் அந்தப் பெண்ணிற்கு பண தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், தான் வேலை செய்யும் முதலாளியான சுரேஷிடம் 50,000 ரூபாய் கடனாக தருமாறு கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் சம்மதம் தெரிவித்து கடன் தருவதாக கூறியுள்ளார். பின்னர், பெண்ணின் 14 வயது மகளுக்கு செருப்பு வாங்கி தருவதாக கூறி, கடைக்கு தனியாக அழைத்து சென்றுள்ளார்.
கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்க்கு வந்த சுரேஷும், சிறுமியும் படம் பார்ப்பதற்காக தியேட்டருக்கு ஒன்றாக சென்றுள்ளனர். தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது, சற்று இருட்டாக இருந்ததால், சுரேஷ் சிறுமியிடம் தவறாக சுநடந்துக்கொண்டார். இதனால் பதறிப் போன சிறுமி, கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால், அருகில் இருந்தவர்கள் சுரேஷை கடுமையாக தாக்கி, வெளியே இழுத்துச் சென்றுள்ளனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மகளை தியேட்டருக்கு முதலாளியுடன் அனுப்பியது தாயின் தவறு என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.