"நான் தோற்று விட்டேன்" - உருக்கமான கடிதம்.!JEE தேர்வுக்கு பயந்து மாணவி தூக்கிட்டு தற்கொலை.!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் 18 வயது மாணவி ஒருவர் தான் JEE தேர்வு எழுத முடியாது என்று குறிப்பிட்டு, ஒரு கடிதத்தை எழுதி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனவரி 31ஆம் தேதி ஜேஇஇ தேர்வுகள் நடைபெற்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோட்டா நகரைச் சேர்ந்த, 18 வயதுடைய நிஹாரிகா என்ற மாணவி தான் ஜெய் தேர்வை எழுத முடியாது என்று கூறி, தனது தாய் தந்தையருக்கு ஒரு தற்கொலை கடிதத்தை எழுதி, தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
அந்த கடிதத்தில், "நான் ஜேஇஇ தேர்வு எழுத முடியாது. நான் தோற்றுவிட்டேன். நான் மிகவும் மோசமான மகள். அம்மாவும், அப்பாவும் என்னை மன்னிக்க வேண்டும். இதுவே எனது கடைசி விருப்பம்" என்று குறிப்பிட்டிருந்தார். இது மாணவியின் பெற்றோரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது சமீபத்திய வாரங்களில் கோட்டா நகரப் பகுதியில் இதே காரணத்திற்காக நடந்த இரண்டாவது தற்கொலை ஆகும். உத்திர பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் ஜனவரி 23ஆம் தேதி இதே காரணத்திற்காக, அவர் தங்கிய விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டுதலைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 16 வயதிற்கு குறைவான மாணவர்களை ஜேஇஇ பயிற்சிகளுக்காக சேர்க்க கூடாது. மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் நல்ல தரவரிசைக்கான பொய்யான வாக்குறுதிகளையோ, உத்தரவாதத்தையோ அளிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.