For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”நீங்க எல்லை மீறி வந்துட்டீங்க”..!! தமிழக மீனவர்கள் 10 பேர் கைது..!! படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை..!!

The Sri Lankan Navy has arrested 10 fishermen from the Naga district.
07:46 AM Jan 09, 2025 IST | Chella
”நீங்க எல்லை மீறி வந்துட்டீங்க”     தமிழக மீனவர்கள் 10 பேர் கைது     படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை
Advertisement

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. கைதாகும் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பது, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, படகுகளை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற செயல்களில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனை தடுக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisement

சமீபத்தில் கூட, இந்தியாவுக்கு வந்திருந்த இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்கவிடம் பிரதமர் மோடி இதுகுறித்து பேசியிருந்தார். ஆனாலும், இதுபோன்ற நடவடிக்கைகள் குறைந்தபாடில்லை. மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான், நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரை நகர் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

Read More : இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு..!! தொடங்கி வைக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்..!! மக்களே உங்களுக்கு டோக்கன் வந்துருச்சா..?

Tags :
Advertisement