மாட்டிறைச்சி சாப்பிடுறீங்க.. கோமியம் மருந்து என சொன்னால் ஏன் எதிர்க்குறீங்க..? - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு
சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள கோ சம்ரக்ஷணா கோசாலையில் மாட்டுப் பொங்கலுக்கு கோ பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி பங்கேற்றார். அந்த நிகழ்வில் அவர் பேசுகையில், எனது அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தது. ஒரு சந்நியாசி வந்தார். அவரிடம் மருத்துவரை கூப்பிடலாமா என்று கேட்டார். அந்த சந்நியாசி மாட்டின் கோமியத்தை குடிக்க சொன்னார். உடனே கோமியத்தை எடுத்து வந்து அப்பா குடித்தார். 15 நிமிடத்தில் அவருக்கு ஜீரம் போய்விட்டதாம்.
பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல் பாதிப்புகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. இந்த மருத்துவ குணம் கொண்ட கோமியத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் பேசியுள்ளார். அறிவியல் பூர்வமாக கோமியம் குடிப்பதற்கு உகந்தது இல்லை எனக் கூறப்படும் நிலையிலும், கோமியம் காய்ச்சலை போக்கும் என்ற சர்ச்சையான கருத்துக்களை சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடு கூறியது, விவாத பொருளாக மாறியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி பேச்சுக்கு பாஜக தமிழிசை செளந்தராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை செளந்தராஜன், "மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரிப்பவர்கள், கோமியம் ஆரோக்கியத்திற்கு நல்லது எனக் கூறுவதை ஏன் எதிர்க்கிறார்கள்.. மாட்டு இறைச்சியை சாப்பிடுகிறார்கள்.. மாட்டு சாணத்தை பயன்படுத்துறாங்க.. ஆனா கோமியம் மட்டும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பார்கள்.. கோமியம் குடித்தால் டாஸ்மார்க் வருமானம் குறைந்து விடும் என்ற அச்சத்தில் கோமியத்தை எதிர்க்கிறார்கள் என பேசினார்.
Read more ; இந்த 5 எண்ணெய்களை சமையலில் பயன்படுத்தாதீங்க.. உயிருக்கே ஆபத்து…! – நிபுணர்கள் எச்சரிக்கை