முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சாதிக்க வயது தடையில்லை..!! 58 வயதில் 3 டிகிரி வாங்கிய முத்துக்காளை..!! ரசிகர்கள் வாழ்த்து..!!

01:17 PM Dec 26, 2023 IST | 1newsnationuser6
Advertisement

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்த முத்துக்காளை, கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவர். சினிமாவில் சண்டைப் பயிற்சியாளராக வேண்டும் என்ற ஆசையில் தனது 18-வது வயதில் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். சினிமாவில் சண்டைப் பயிற்சியாளராக சில காலம் பணியாற்றிய அவர், 1997இல் பொன்மனம் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு என் உயிர் நீதானே, நிலவே முகம் காட்டு போன்ற படங்களில் நடித்தார்.

Advertisement

இப்படி சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு இருந்தவரை, வடிவேலுவுடன் ஏற்பட்ட நட்பு பிரபல நகைச்சுவை நடிகராக்கியது. வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்து இவர் பிரபலமானார். செத்து செத்து விளையாடலாம் என்ற இவரது காமெடி மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனது. ஆனால், அரசியல் மேடையில் பேசியதால், வடிவேலுக்கு மார்க்கெட் குறைந்ததைத் தொடர்ந்து முத்துக்காளைக்கும் பட வாய்ப்பு இல்லாமல் போனது.

இந்நிலையில் படவாய்ப்பு இல்லாத காலத்தில் படிப்பு மீதான தனது ஆர்வத்தை பூர்த்தி செய்திருக்கிறார் முத்துக்காளை. படிப்பில் கவனத்தைத் திருப்பிய இவர், 2017இல் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வரலாறு பாடத்தில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். பிறகு 2019இல் எம்.ஏ. தமிழ் படித்து அதிலும் முதல் வகுப்பில் தேச்சி பெற்றுள்ளார். தற்போது 58 வயதான முத்துக்காளை அண்மையில் வெளிவந்த பி.லிட் என்ற தமிழ் இலக்கியம் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறு வயதில் இருந்தே பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட இவர், தனது கனவை 50 வயதுக்கு பிறகு நிறைவேற்றியிருக்கிறார். சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை முத்துக்காளை நிரூபித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
நகைச்சுவை நடிகர் முத்துக்காளைவிருதுநகர் மாவட்டம்
Advertisement
Next Article