முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இதை நீங்கள் செய்யவில்லையா..? அப்படினா Gpay, PhonePe இனி செயல்படாது..!! வெளியான அலெர்ட்..!!

11:55 AM Nov 21, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட பேமெண்ட் செயலிகள் மற்றும் வங்கிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக செயலில் இல்லாத UPI ஐடிகள் மற்றும் எண்களை செயலிழக்கச் செய்யுமாறு இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த UPI ஐடியைப் பயன்படுத்தாமல் பல நாட்கள் விட்டுவிடுவதால், பாதுகாப்புச் சிக்கல்கள் அதிகரிக்க நேரிடும். இதனால், UPI ஐடி மோசடியின் அபாயத்தைக் குறைக்க இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல பயனர்களின் UPI ஐடிகள் டிசம்பர் 31ஆம் தேதி முதல் மூடப்படலாம் என்பதால் Google Pay, PhonePe மற்றும் Paytm பயனர்கள் அதிக சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

இது தொடர்பாக கூகுள் பே, பேடிஎம் மற்றும் போன் பே ஆகிய நிறுவனங்களுக்கு இந்திய தேசிய கட்டணக் கழகம் (என்பிசிஐ) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது, ஓராண்டாக செயல்பாட்டில் இல்லாமல் இருக்கும் UPI ஐடிகளை 31 டிசம்பர் 2023 முதல் அதனை செயலிழக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர் ஒரு வருடத்திற்கு UPI ஐடி மூலம் பரிவர்த்தனை செய்யவில்லை என்றால், அது டிசம்பர் 31, 2023க்குப் பிறகு செயலிழந்துவிடும்.

என்பிசிஐ என்பது ஒரு லாப நோக்கற்ற அமைப்பாகும். இது இந்தியாவின் சில்லறை கட்டணம் போன்றவைகளை நிர்வகிக்கிறது. கூகுள் பே, ஃபோன் பே போன்ற பயன்பாடுகள் அதன் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகின்றன. NPCI-ன் சுற்றறிக்கையின்படி, UPI ஐடி மூடப்படுவதற்கான காரணம் பயனர் பாதுகாப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பலமுறை பயனர்கள் தங்கள் பழைய எண்ணை இணைக்காமல் புதிய ஐடியை உருவாக்குவதால் அது மோசடிக்கு வழிவகுக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பழைய ஐடிகளை அதாவது கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தப்படாத ஐடிகளை மூட NPCI அறிவுறுத்தியுள்ளது.

Tags :
GpaypaytmPhonepeupiகூகுள் பேயுபிஐ ஐடிவாடிக்கையாளர்கள்
Advertisement
Next Article