For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Modi: என்னையே ஏமாற்றிட்டானே!… பிரதமர் மோடி போட்ட ட்வீட்!… தலைமறைவான பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

07:00 AM Mar 13, 2024 IST | 1newsnationuser3
modi  என்னையே ஏமாற்றிட்டானே … பிரதமர் மோடி போட்ட ட்வீட் … தலைமறைவான பாஜக நிர்வாகியால் பரபரப்பு
Advertisement

Modi: தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பார்க்காமல் தன்னை வரவேற்க வந்த தொண்டர் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியாக பேசிய நிலையில், அந்த நிர்வாகி தற்போது தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், நிறைவு பெற்ற திட்டங்களையும் புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார். அந்தவகையில் கடந்த 4ம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவை கடுமையாக விமர்சித்தார். மேலும், பிரதமர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை முழுவதும் தொண்டர்கள் சூழ்ந்தனர். அப்போது, அஸ்வந்த் பிஜாய் என்ற பாஜக தொண்டர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். இந்த பாஜக தொண்டருக்கு இரட்டை குழந்தைகளை பிறந்த நிலையில், குழந்தைகளை பார்க்காமல் மோடியை வரவேற்பதற்கு வந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், "மிகவும் சிறப்பு வாய்ந்த சந்திப்பு! சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி நிர்வாகிகளில் ஒருவரான அஸ்வந்த் பிஜய் என்னை வரவேற்க காத்திருந்தார். சற்றுமுன் தான், அவரது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் என்றும், ஆனால் அவர் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை என்றும் என்னிடம் கூறினார்.

இந்த நேரத்தில் அவர் இங்கு வந்திருக்கக் கூடாது என்றும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆசிகளையும் தெரிவித்தேன். நமது கட்சியில் கடமை மற்றும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கட்சியினரின் இத்தகைய அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது நான் உணர்ச்சிவசப்படுகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த பலரும் அஸ்வந்த் பிஜய் யார்? என தேட தொடங்கினர்.

அப்போது தான் அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதும், அவர் தற்போது சென்னை வேளச்சேரியில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அதேவேளையில் இன்னொரு தகவல் பாஜக நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்தது. அதாவது அஸ்வந்த் பிஜய் தனது மனைவிக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாகவும், அவர்களை பார்க்காமல் பிரதமர் மோடியை சந்தித்ததாகவும் கூறியது பொய் என்பது தெரியவந்தது.

மேலும் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் அப்படி பொய் சொன்னதும், ஆனால் இந்த சம்பவத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதால் அவரை பலரும் தேடிய நிலையில் அவருக்கு இரட்டை குழந்தை பிறக்காதது தெரியவந்ததும் புலனானது. தற்போது இந்த தகவல் வெளியான நிலையில் அஸ்வந்த் பிஜய் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Readmore: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.20 லட்சம் கடன்…! மத்திய அரசின் சூப்பர் திட்டம்…! மிஸ் பண்ணிடாதீங்க

Advertisement