”மந்தாரை உள்ளவரை நொந்தாரைக் காண முடியாது”..!! தைராய்டுக்கு மாமருந்து..!! எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள்..!!
”மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது” என்று ஒரு மருத்துவப் பழமொழியே உண்டு. அந்த அளவுக்கு மந்தாரையில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இது மணமுடைய இரண்டாகப் பிரிந்த இலைகளையும், பலநிற மலர்களையும் உடைய சிறுசெடி வகையாகும். இதில் செந்நிற மலருடைய பெரிதாய் வளரும் இனமும் காணப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, வேர், பட்டை ஆகியன மருத்துவக் குணம் கொண்டவை. மந்தாரையானது திருக்கானப்பேர் (காளையார்கோயில்), திருத்திலதைப்பதியிலும் தலமரமாக விளங்கிறது.செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்இலைகளில் குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் விதைகளில் உள்ளன.
ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின், போன்ற வேதிப்பொருட்களும் தாவரத்தில் உள்ளன. இதன் காரணமாக கோடைக்காலத்தில் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். ரத்தக்கட்டிகளை குணமாக்கும் மலர்கள், மிதமான பேதி மருந்து, உலர்ந்த மொட்டுக்கள், பூச்சிகளை நீக்கும். சீதபேதி மற்றும் மூல வியாதியை குணப்படுத்தும். பட்டை வயிற்றுப்போக்கில் பயன்படும். வேர்ப்பட்டை தயிர் உடன் கலந்து இரத்தக் கட்டிகளை குணப்படுத்த உதவும். அரைத்த வேர்ப்பட்டை சுக்குடன் கலந்து குரல்வளை சுரப்பி வீக்கத்துக்கு தடவப்படுகிறது. வேர் அஜீரணத்தைப் போக்கும். மந்தாரைப் பட்டை சதை, நரம்புகளைச் சுருக்கி ரத்தம், சீழ்க்கசிவுகளைக் கட்டுப்படுத்தக்கூடியவை. நோய் நீக்கி உடல் தேற்றும் மருந்தாகப் பயன்படுகிறது.
முடியின் வேர்க்கால்களை உறுதிப்படுத்தி, உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியது மந்தாரை. தைராய்டு நோய்க்கு தீர்வு, தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத்தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல்வலி, மன அழுத்தம், போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதிகமான தைராய்டு சுரந்தால் இதயத்துடிப்பு அதிகமாகும், எடை குறையும். கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும். காஞ்சனாரம் என்று அழைக்கப்படும் மந்தாரைத் தாவரம் தைராய்டு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதனை மருந்தாக உட்கொள்வதன் மூலம் தைராய்டு சுரப்பினை சீராக்குவதோடு, உடல் நலனை சீராக்கும்.
Read More : பிணங்களுடன் உடலுறவு கொள்ளும் அகோரிகள்..!! காரணம் தெரிஞ்சா ஆடிப்போவீங்க..!! ஏன் தெரியுமா..?