வாட்ச் போதும்.. ஊசி, ரத்தம் இல்லாமல் சர்க்கரை பரிசோதனை செய்யலாம்..!! - விஞ்ஞானிகள் அசத்தல்
உடலில் சர்க்கரை நோயின் அளவை அறிய, ரத்தம் எடுக்க வேண்டும். ஆனால், இப்போது ரத்தம் இல்லாமல் சர்க்கரை அளவை கண்டறிய வாட்டர்லூ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இது பருவநிலை மாற்றத்தைக் கணிக்கப் பயன்படுத்தப்படும் முறையைப் பின்பற்றி உருவாக்கப்பட்டது. இந்த சாதனத்தின் உதவியுடன், உடலில் ஏற்படும் மாற்றங்களை எளிதில் கண்டறிய முடியும்.
குளுக்கோஸ் அளவை பரிசோதிக்க முடியும், வாட்டர்லூ பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஜார்ஜ் சேகர் தலைமையிலான ஆராய்ச்சி குழு இந்த சாதனத்தை உருவாக்கியது. இக்கருவியின் உதவியால் வலி மட்டுமின்றி, தொற்று நோய்களும் ஏற்பட வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் ஜார்ச் சேகர் கூறுகையில், "ஸ்மார்ட் வாட்சிலும் பொருத்தக்கூடிய ரேடார் தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதன் விளைவாக, இதுவரை இல்லாத அளவுக்கு குளுக்கோஸ் அளவை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். கண்பார்வையை மேம்படுத்த கண்ணாடியைப் பயன்படுத்துவதைப் போலவே குளுக்கோஸ் அளவை சரிபார்க்கவும் இந்த தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும். ரேடார் தொழில்நுட்பம் வளிமண்டலத்தில் ஏற்படும் சுனாமிகள் மற்றும் புயல்களைக் கண்டறிய செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படுகிறது,
மேலும் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்க, அவை ஒரு சிறிய சாதனத்தில் நிறுவப்பட்டுள்ளன, இதில் ரேடார் சிப் உடலில் ஏற்படும் மாற்றங்களை அனுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. துல்லியமான தகவல்களுக்கு செயற்கை நுண்ணறிவு அமைப்புடன் செயல்படும் மைக்ரோ-கண்ட்ரோலர்களையும் இது பயன்படுத்துகிறது.
உடலில் குளுக்கோஸ் அளவுகளில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட இது கண்டறியும் என்கிறார் டாக்டர் ஜார்ஜ் சேகர். இரத்தத்துடன் நேரடி தொடர்பு இல்லாமல் செய்யப்படும் எந்தப் பரிசோதனையும் இந்த அளவு துல்லியத்தை அடையவில்லை என்று அவர் விளக்கினார். தற்போது கண்காணிப்பில் உள்ள இந்த கருவியை மேலும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். தற்போது யுஎஸ்பி உதவியுடன் இயங்கி வரும் இந்த சாதனம் முழு அளவிலான போர்ட்டபிள் பேட்டரி மூலம் செயல்படும் வகையில் தயாரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. குளுக்கோஸ் அளவுகள் மட்டுமல்ல, இரத்த அழுத்தம் போன்ற பிற உடல்நலம் தொடர்பான தரவுகளையும் சேகரிக்க முயற்சிக்கின்றனர்.