இந்த கடையில் நீங்க பட்டாசு வாங்கினா 500 முதல் 600 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்...! அவசியம் தெரிஞ்சுக்கோங்க...
கூட்டுறவுத்துறை மூலம் பட்டாசுகளை வாங்கினால் 500 முதல் 600 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்.
தீபாவளியையொட்டி குறைந்த விலையில் பட்டாசு விற்பதற்காக, கூட்டுறவு துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா, 5 முதல் 10 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், தீபாவளியை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைத்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். வெளிச்சந்தையில் நாம் வாங்கினால் கூடுதல் விலைக்கு வாங்கும் சூழல் உள்ளது. ஆனால் கூட்டுறவுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பட்டாசு கடைகள் மூலம் வாங்கினால் குறைந்த விலைக்கு கிடைக்கும்.
வரும் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், கூட்டுறவு சங்கங்கள் சென்னையில் 40 கடைகள் வரையும், மற்ற மாவட்டங்களில் தலா 5 முதல் 10 பட்டாசு கடைகள் வரை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு துறை மூலம் 60% முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. வெளியில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பட்டாசு அரசு சார்பில் 300 முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே நீங்கள் கூட்டுறவுத்துறை மூலம் பட்டாசுகளை வாங்கினால் 500 முதல் 600 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்.