For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இனி மின் கட்டணத்தை இவ்வளவு ஈசியா செலுத்தலாமா..? மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!

To facilitate the payment of electricity, the 'QR line facility has been introduced.
12:54 PM Jul 24, 2024 IST | Chella
இனி மின் கட்டணத்தை இவ்வளவு ஈசியா செலுத்தலாமா    மக்களே தெரிஞ்சிக்கோங்க
Advertisement

தமிழ்நாட்டில் மின்வாரிய அலுவலகங்களில் நேரில் சென்றுதான் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை முன்பு இருந்தது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மின்கட்டண வசூல், மின்னணு டிஜிட்டல் முறையில் மாறியது. அதன்படி நெட்பேங்கிங், பாரத் பில் பேமென்ட் சேவை, டெபிட், கிரெடிட் கார்டுகள், இ-சேவை மையங்கள், அஞ்சல் நிலையங்கள் மூலம் மின்னணு முறையில் மின்கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது.

Advertisement

மின்வாரிய அலுவலகங்களில் 'க்யூஆர் கோடு' வசதியும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை தற்போது 83% நுகர்வோர் மின்னணு முறையில் செலுத்தி வருகின்றனர். 2023-24ஆம் ஆண்டில் மின்னணு முறையில் செலுத்தப்பட்ட கட்டணம் மூலம் ரூ.50,217 கோடி வருவாய் கிடைத்தது. கடந்தாண்டை விட இது 31 சதவீதம் அதிகம். தொழிற்சாலைகள் உட்பட உயர் அழுத்த பிரிவு மின்நுகர்வோர் அனைவரும் மின்கட்டணத்தை மின்னணு முறையிலேயே செலுத்தி வருகின்றனர்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதிக்கு 3 நாட்கள் முன்னதாக நுகர்வோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி நினைவூட்டல் செய்யப்படுகிறது. கட்டணம் செலுத்தியதும் அதை உறுதி செய்து நுகர்வோருக்கு தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், மின்கட்டணம் செலுத்துவதை எளிதாக்கும் வகையில், க்யூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் தற்போது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஒருமுறை டெபாசிட் செய்தால் மாதந்தோறும் நல்ல வருமானம் பெறலாம்..!! இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Tags :
Advertisement