உடற்பயிற்சி இல்லாமலே ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறைக்கலாம்.. இதை மட்டும் செய்யுங்க..
உட்கார்ந்த வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கங்கள் உள்ளிட்ட பல காரணங்கள் இன்று உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலரும் கடுமையான டயட், உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கடுமையான ஜிம் உடற்பயிற்சிகள் இல்லாமல் ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 10 கிலோ எடையைக் குறைக்கலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான எடை இழப்புக்கு, நடைப்பயிற்சி முக்கியமானது. தீவிரமான ஜிம் பயிற்சிகளுக்குப் பதிலாக, உங்கள் வீட்டிற்கு அருகிலேயே தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும். 4 நாட்களில் உங்களுக்கு பலன்கள் தெரியவில்லை என்று பலரும் நடைபயிற்சியை விட்டுவார்கள். ஆனால் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து நடப்பது மிகவும் முக்கியம். நீங்கள் எவ்வளவு அதிகமாக நடக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக கலோரிகளை எரிக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே தொடர்ந்து தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது சிறந்த பலன்களை வழங்கும்.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூற்றுப்படி, தினமும் 1.6 கிமீ நடப்பது உங்கள் வேகத்தைப் பொறுத்து 55 முதல் 140 கலோரிகளை எரிக்கக்கூடும். பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவை தினமும் குறைந்தது 150 நிமிடங்கள் நடக்க பரிந்துரைக்கிறது.
அந்த வகையில் தினமும் 10,000 அடிகள் நடப்பது ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. நடைப்பயிற்சி மூலம் எடை குறைக்க எடுக்கும் நேரம் மாறுபடும். சிலர் தினமும் 10,000 அடிகள் நடப்பதன் மூலம் ஒரு மாதத்தில் 10 கிலோவை இழக்கலாம். இன்னும் சிலருக்கு பல காரணிகளால் இரண்டு மாதங்கள் ஆகலாம்.
எடை இழப்புக்கு, வழக்கமான வேக நடைப்பயிற்சி மட்டும் போதாது. யை தீவிரமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான சமச்சீரான உணவு, ஜங்க் ஃபுட் தவிர்ப்பது, போதுமான தண்ணீர் குடிப்பது, சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது மற்றும் நல்ல தூக்கம் போன்ற .