For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

" எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்துக்கொள்ள முடியும்" - மத்திய அரசு சொல்லும் விதிகள் என்ன?

06:30 AM Apr 25, 2024 IST | Baskar
  எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்துக்கொள்ள முடியும்    மத்திய அரசு சொல்லும் விதிகள் என்ன
Advertisement

வீடுகளில் நாம் தங்க நகைளை வைத்துக்கொள்ள சில விதிகள் உள்ளன. எவ்வளவு தங்கம் வரை வைத்துக்கொள்ளலாம், அதிலும் யார் யார் எவ்வளவு தங்கம் வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Advertisement

திருமணம் அல்லது பண்டிகை நாட்களில் நாம் தங்க நகைகளை வாங்குவோம். தங்க நகைகளை விரும்பி அணிவதற்கு வாங்கினாலும் பெரும்பாலானோர் முதலீடுக்காகத் வாங்குகின்றனர். ஆபத்து நேரத்தில் கைக்கொடுக்கக் கூடியது தங்க நகைகள்தான். நீண்ட ஆண்டுகளாக தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் ஆபரணங்களாகவோ, நாணயங்களாவோ தங்கம் நிச்சயம் இருக்கும். அப்படி நாம் வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு உள்ளது.

வீட்டில் எவ்வளவு தங்கம் வைக்கலாம் என்பதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தகவலின்படி, முறையான வருமான ஆதாரங்கள் மற்றும் விவசாய வருமானம், சட்டப்பூர்வமாக பெறப்பட்ட பணம் மற்றும் சேமிப்பிற்கு எந்தவித வரியும் விதிக்கப்படாது. திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரை வைத்துக்கலாம். திருமணமாகாத ஆண் 100 கிராம் வரையில் தங்கம் வைத்திருக்கலாம். திருமணமான பெண் 500 கிராம் வரையில் தங்கம் வைத்திருக்கலாம்.

திருமணமான ஆண் 100 கிராம் வரை தங்கம் வைத்து இருக்கலாம். உங்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் போது வீட்டிலிருந்து கணக்கில் காட்டப்பட்ட தங்க நகைகளை எடுத்துச் செல்ல முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தங்க நகைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், அதனை வீட்டில் சேமிப்பது தொடர்பான அரசாங்க விதிகளைப் புரிந்துகொள்வதும் அவசியம்.

ஒரு திருமணமான பெண் 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார். திருமணமாகாத பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு 250 கிராம் ஆகும். அதே சமயம் ஆண்கள் 100 கிராம் வரை தங்கம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். வீட்டில் சோதனை நடவடிக்கைகளின் போது, ​​நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குக் குறைவாக தங்கம் இருந்தால், அதிகாரிகள் நகைகள் அல்லது தங்கத்தை பறிமுதல் செய்ய முடியாது என்று அரசாங்க விதிமுறைகள் கூறுகின்றன. தங்க நகைகள் மற்றும் நாணயங்களுடன் ஒப்பிடுகையில், டிஜிட்டல் தங்கம் வருமானத்தின் அடிப்படையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

டிஜிட்டல் தங்கம் வாங்குதல்களின் அடிப்படையில், தனிநபர்கள் வாங்கும் போது GST மற்றும் பிற சிறிய கட்டணங்களை மட்டுமே செலுத்த வேண்டும். சட்டப்படி, டிஜிட்டல் தங்கம் வாங்குவதற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதற்கு ஒரு நாளில் ரூ.2 லட்சம் வரை செலவிடலாம். கூடுதலாக, 3 ஆண்டுகளுக்கு குறைவாக வைத்திருக்கும் டிஜிட்டல் தங்கத்திற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி இல்லை. இருப்பினும், நீங்கள் 20% விகிதத்தில் நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.

Read more: Jio பயனர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! ஏப்ரல் 25ஆம் தேதி ஆப்பு வைக்கும் அம்பானி..!!

Advertisement