முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

School | 'இனி இந்த வயதிலும் ஆசிரியர் பணியில் சேரலாம்'..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

07:13 AM Feb 26, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இனி 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வயது தளர்வு குறித்து சிறுபான்மையினர் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அரசாணையில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பான சிறப்பு விதிகளில் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 9ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொண்டு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Rain Notification: தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் தகவல்

Advertisement
Next Article