ஆன்லைனில் ஈசியாக பட்டா மாற்றலாம்..!! என்னென்ன ஆவணங்கள் தேவை..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி? என்பது குறித்தும் அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? என்பது குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் பட்டா பெயர் மாற்றம் செய்வது மிகவும் எளிது. ஒருவரின் பெயருக்கு சொத்து பதிவு செய்யப்படுகிறது என்றால், கையோடு வருவாய் துறை மூலம் பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் நிலம் வெப்சைட் மூலம் பத்திரப்பதிவு செய்த பின், ஆன்லைனிலேயே நீங்கள் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்க முடியும். தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று அலைய தேவையில்லை.
விஏஓ, நில அளவையர் உள்பட யாருக்கும் லஞ்சமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சரியான முறையில் ஆவணங்களை சமர்பித்து பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும். தமிழ் நிலம் வெப்சைட்டில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் உங்கள் பெயர், மொபைல், எண் முகவரி உள்ளிட்ட விவரங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த பின், மொபைல் நம்பர், ஐடி , பாஸ்வேர்டு கொடுத்து உள்ளே செல்ல வேண்டும். பட்டா மாறுதல் கோரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் இம்முறையில் விண்ணப்பிக்கலாம். பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் உட்பிரிவுள்ள இனங்கள் அல்லது உட்பிரிவு அல்லாத இனங்கள் என 2 முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும். உட்பிரிவு இல்லாத நிலம் என்றால் அதற்கான லிங்கிலும், உட்பிரிவு உள்ள இனம் என்றால் அதற்கான லிங்கிலும் பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
பட்டாவிற்கு விண்ணப்பிக்க
கிரையப் பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தானப் பத்திரம், பரிவர்த்தனை பத்திரம், அக்குவிடுதலைப் பத்திரம் தேவையாகும். இந்த 6 பத்திரங்களில் எந்த பத்திரம் உங்களிடம் உள்ளதோ அந்த பத்திரத்தின் நகலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பத்திரப்பதிவு செய்தவர்களின் ஆதார் அல்லது அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், பதிவு பத்திரம் போன்றவை போதும்.
ஆனால், பின்னர் தானப்பத்திரம், பாகப்பரிவினை பத்திரம் உள்ளிட்டவை என்றால் கண்டிப்பாக வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் அப்லோடு செய்ய வேண்டும். எல்லாம் முடிந்த பின், உட்பிரிவு உள்ள பட்டா வகை என்றால், 60 ரூபாய் மற்றும் 600 என இரண்டு கட்டங்கள் சேர்த்து வசூலிப்பார்கள். ஒரு உட்பிரிவுக்கு 600 என ஒவ்வொரு உட்பிரிவுக்கும் 600 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இதை முடித்த பின்னர் பட்டா பெயர் மாற்றம் செய்தற்காக அத்தாட்சி சான்று தருவார்கள்.
பட்டா பெயர் மாற்ற 2-வது வழிமுறை
மேற்கண்ட 6 பத்திரங்கள் தான் இதற்கும் தேவைப்படும். இ-சேவை மையம் மூலம் அப்ளை செய்வது மிகவும் ஈஸியானது. மேற்கண்ட வழிகளில் எதாவது ஒரு வழியில் பட்டா பெயர் மாற்றம் செய்தவர்கள் ஆதார் கார்டு, முகவரி சான்று, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு கட்டணம் செலுத்திய சான்று உள்ளிட்ட சான்றுகள் உள்ள நகல்களுடன் விஏஓ அலுவலகத்திற்கு சென்று பட்டா பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்த தகவலை கூறுங்கள். அடுத்த ஒரு வாரத்தில் உங்கள் பெயருக்கு பட்டா மாறிவிடும்.