முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

போட்டோ ஷூட்டை நிறுத்திவிட்டு நிவாரண பணிகளை பாருங்கள்.! தமிழகp அமைச்சர்களுக்கு அண்ணாமலை கண்டனம்.!

01:28 PM Dec 08, 2023 IST | 1newsnationuser4
Advertisement

சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. மழை நின்று சில தினங்களாகியும் மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை நீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. பொதுமக்கள் அடிப்படை தேவைகளான உணவுக்கும் குடிநீருக்கும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு தனது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் பெரும் மழை வரப்போகிறது என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை கிடைத்த பிறகும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தாமதம் காட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக மத்திய அரசு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை 24 மணி நேரத்திற்குள் அனுப்பி வைத்து புயலில் ஏற்பட்ட சேதங்களைப் பற்றிய விவரங்களை அறிந்ததாக தெரிவித்திருக்கிறார்.

சென்னை மக்கள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் கஷ்டப்படுவதை பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புயல் மற்றும் மழை காரணமாக மக்கள் உணவு மற்றும் உறைவிடத்திற்கும் உத்தரவாதம் இல்லாமல் தவித்துப் போனார்கள் என தெரிவித்துள்ளார். தமிழக அரசு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது. ஆனால் மத்திய அரசு 24 மணி நேரத்தில் புயல் பற்றி விவரங்களை அறிந்திருக்கிறது.

தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட இடங்களிலும் நிவாரணம் வழங்கும் இடங்களிலும் போட்டோ சூட் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிவாரண பணிகளை முழுமூச்சுடன் முன்னெடுக்க வேண்டும். இதற்கு முன்பு 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களில் இருந்து தமிழக அரசு பாடம் படித்திருக்க வேண்டும். ஆனால் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் தற்போதும் மக்கள் மிகப்பெரிய துயரத்திற்கு ஆளாகி இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

Tags :
annamalaiCyclonegovernmentstalinTamilnadu
Advertisement
Next Article