இந்த விஷயம் தெரிஞ்சா போதும்..! 8-4-3 ஃபார்முலா கேள்விபட்டிருக்கீங்களா? நீங்களும் கோடீஸ்வரன் தான்..!!
இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. இதற்காக சேமிப்புடன் முதலீடும் செய்கிறார். ஆனால், கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற அவரது கனவு நனவாகுவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்று தெரியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், ஒரு ஃபார்முலாவைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள் என்று ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.
8-4-3 ஃபார்முலா : சிறந்த வருமானத்தைப் பெறவும் சரியான வழியில் முதலீடு செய்யவும் பலர் 8-4-3 ஃபார்முலாவைப் பின்பற்றுகின்றனர். இதில் முதலீடு செய்வதன் மூலம் குறைந்தபட்சம் 12 சதவீதம் வரை லாபம் பெறலாம். இந்த சூத்திரம் மிகவும் எளிமையானது. சூத்திரத்தின்படி, வருடாந்திர கூட்டு வட்டியை வழங்கும் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில், கூட்டு வட்டியை வழங்கும் இதுபோன்ற பல திட்டங்கள் சந்தையில் உள்ளன.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.21,250 முதலீடு செய்தால், 8 ஆண்டுகளில் ரூ.33.37 லட்சம் நிதி தயாராகிவிடும். கோடீஸ்வரனாவதற்கு இதுவே முதல் படி. இப்போது மீண்டும் கூட்டு வட்டியின் உதவியுடன், அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ. 33.37 லட்சத்தை வசூலிப்பீர்கள், பின்னர் வெறும் 3 ஆண்டுகளில் மேலும் ரூ.33 லட்சம் உங்கள் நிதியில் சேர்க்கப்படும். இப்படியாக 8 4 3 விதியின் மூலம் 15 வருடங்களில் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள். இதேபோல், 15 ஆண்டுகளுக்குப் பிறகும் 6 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.21,250 டெபாசிட் செய்தால், மொத்தம் 21 ஆண்டுகளில் உங்களிடம் ரூ.2.22 கோடி நிதி இருக்கும்.
கூட்டு வட்டி மந்திரம் : அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 பணத்தை 12% வருடாந்திர வட்டியில் முதலீடு செய்ய முடியும் என்றால் '8-4-3' விதியைப் பின்பற்றலாம். இந்த முறையில முதலாவது 80 லட்சம் ரூபாய் சேர 8 வருடம் ஆகும். ஆனால், இரண்டாவது ரூ.80 லட்சம் சேர்வதற்கு மேலும் நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆகும். மூன்றாவது ரூ.80 லட்சம் கிடைக்க இன்னும் மூன்றே ஆண்டுகள் காத்திருந்தால் போதும்.
இந்த வேகமான வளர்ச்சி கூட்டு வட்டி மூலம் சாத்தியமாகிறது. அதாவது செய்யப்பட்ட முதலீடு லாபத்தைப் பெருக்கும் வகையில் மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது. காலப்போக்கில், கூட்டு வட்டியின் பங்களிப்பு ஆரம்ப முதலீடுகளையே மிஞ்சிவிடும். முதல் ரூ. 80 லட்சத்தில், சுமார் 61% உங்கள் சொந்தப் பணத்திலிருந்து வரும். அதே சமயம் 39% வட்டி மூலம் சேரும். அடுத்து நான்கு வருடங்கள் சென்றால் ரூ. 1.6 கோடி இருக்கும் இருக்கும். அதில் கிட்டத்தட்ட 70% வட்டி மூலம் இருக்கும். முறையான முதலீடுகளின் பங்களிப்பு 30% மட்டுமே கிடைக்கும். இவ்வாறு வட்டி பங்களிப்பை அதிகரிக்கும் போக்கு தொடர்கிறது.
Read more ; மீண்டும் இணையும் ஜெயம் ரவி – ஆர்த்தி ஜோடி..!! சென்னை குடும்ப நல நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!