முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BSNL நிறுவனம் சூப்பர் அறிவிப்பு...! ஃபேன்சி எண்களைப் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...!

09:29 AM Mar 22, 2024 IST | 1newsnationuser2
Advertisement

பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் 25.03.2024 முதல் 03.04.2024 வரை வேனிட்டி மொபைல் எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 03.04.2024 ஆகும்.

Advertisement

மொபைல் எண் என்பது ஒருவரது எளிதான அடையாளம், இதன் மூலம் நாம் மற்றவர்களையும், மற்றவர்கள் நம்மையும் தொடர்பு கொள்ளலாம். ஒரு தொழிலதிபருக்கு மொபைல் எண் என்பது அவரது வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய ஃபேன்ஸி எண்ணாக இருக்க வேண்டும். சில நபர்களுக்கு ஃபேன்ஸி எண் வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.குறிப்பாக, சிலருக்கு நம் பிறந்த தேதி, வருடம் அல்லது வாகன எண் அல்லது ஏதோ பிடித்த எண் தொலைபேசி எண்ணின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ உள்ள எண்களை வாங்கிப் பயன்படுத்துவதில் தனி ஆர்வம் இருக்கும்.

சிலர் அலுவலக பயன்பாட்டிற்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக தொடர்ச்சியான எண்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். அனைவரின் ஃபேன்சி எண் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பிஎஸ்என்எல் பல்வேறு வகையான வேனிட்டி எண்களை வழங்குகிறது. ஆன்லைனில் வேனிட்டி எண்ணைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ eauction.bsnl.co.in இணையதளத்திற்குச் செல்லவும் . இந்த தளத்தில் உள்ள “Login/Register” என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் தற்போதைய மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி குறிப்பிடவும். இப்போது உங்கள் உள்நுழைவு விவரங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். பின்னர் உங்கள் முன் காட்டப்படும் பிரீமியம் எண்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்யவும்.

இப்போது “Continue to card” என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவும் (திரும்பப் பெறத்தக்கது). அடுத்து நீங்கள் விரும்பிய எண்ணை ஏலத்தில் எடுப்பதற்காக குறைந்தபட்ச ஏலத் தொகையைக் குறிப்பிடவும். ஒவ்வொரு ஃபேன்ஸி எண்ணுக்கும் 3 பயனாளர்கள் BSNL தேர்ந்தெடுக்கும். மீதமுள்ள பயனாளர்களுக்கு அவர்களின் பதிவுக் கட்டணம் 10 நாட்களுக்குள் அதே ஆன்லைன் மூலம் திரும்ப செலுத்தப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பயனாளர்கள் குறிப்பிட்ட ஏலத் தொகையின்படி H1, H2, H3 என வகைப்படுத்தப்படுவார்கள்.

அதிக ஏலம் எடுப்பவருக்கு எண் ஒதுக்கப்படும். அவர் அதை எடுக்க விரும்பவில்லை என்றால், அடுத்தவருக்கு அந்த எண் ஒதுக்கப்படும். மின் ஏலத்தில் நம்பரை வென்றவருக்கு அடுத்த சில நாட்களில் எண் வழங்கப்படும்.

Advertisement
Next Article