முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி படிப்புக்கு டிசம்பர் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...!

You can apply for the Integrated Pharmacy and Nursing Therapy Diploma course.
06:33 AM Nov 19, 2024 IST | Vignesh
Advertisement

ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவ பட்டயப்படிப்புப் பள்ளிகளில் (சென்னை மற்றும் பாளையங்கோட்டை) உள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புகளுக்கான காலி இடங்கள் அனைத்திற்கும். 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவம் "www.tnhealth.tn.gov.in" மற்றும் தகவல் தொகுப்பேட்டினை என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement

விண்ணப்பங்கள் இவ்வியக்குநரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்படமாட்டாது. மேலும், அடிப்படைத்தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு "www.tnhealth.tn.gov.in" என்ற வலைதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம். விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 19.11.2024 முதல் 02.12.2024 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள்: 02.12.2024 மாலை 05.30 மணி ஆகும்.

விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்கவேண்டிய முகவரி: "செயலர்.தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை 600 106. 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும் மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வரவேண்டும். கலந்தாய்வு தேதி, இடம் மற்றும் அனைத்து விவரங்களும் வலைதள முகவரி மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும். கலந்தாய்வு அன்று நேரில் வரத்தவறியவர்கள் தங்களது வாய்ப்பை இழந்துவிடுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags :
applicationHigher educationnursetn government
Advertisement
Next Article