”வேல சொல்லியே கொல்றாங்க”..!! விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட ரோபோ..!!
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது கடந்த சில ஆண்டுகளாக உச்சத்தை எட்டியிருக்கிறது. ஒவ்வொரு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி தங்களின் கால் தடங்களை பதித்து வருகின்றன. அதிலும் ஒவ்வொரு துறை சார்ந்தும், குறிப்பிட்ட பணிக்காகவும் சில ரோபோக்கள் தயார் செய்யப்படுகின்றன. இவை மனிதர்களின் வேலைப் பளுவை குறைக்கும் நோக்கத்துடனும், விரைவான பணிக்காகவும் உருவாக்கப்படுகின்றன.
அந்த வகையில், தென் கொரியாவில் பொது மக்களுக்கு உதவும் வகையிலான ஒரு ரோபாட் தயாரிக்கப்பட்டது. ஆனால், இந்த ரோபாட் தற்போது தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவும் படியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்திருப்பதாகவும், அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரியாவில் உள்ள குமி (Gumi) என்ற நகரின் சிட்டி கவுன்சிலில் இந்த ரோபாட் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த குமி சிட்டி கவுன்சில் அலுவலகத்தில்தான் அந்த ரோபாட் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தினமும் ஆவணங்களை டெலிவரி செய்வது, உள்ளூர் மக்களுக்கு தகவல்களை கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ரோபாட் இந்த பணியில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் ரோபாட் தற்கொலையாக இது பார்க்கப்படும் வேளையில், தென்கொரியாவின் இந்த குமி நகரே அதற்கு இரங்கல் செலுத்தியது. அதாவது குமி சிட்டி ஹாலில் இரண்டு மீட்டர் படிகட்டில் இருந்து கீழே விழுந்து அந்த ரோபாட் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதுவும் அந்த கட்டடத்தின் முதல் மற்றும் 2-வது தளத்திற்கு மத்தியில் மொத்தமாக சேதமடைந்த நிலையில், அந்த ரோபோட் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Read More : தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களுக்கு தட்டுப்பாடு..? 3 மாதங்களாக இதே நிலைமை தான்..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!