For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

OTT-யில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்..!! முதல் எபிசோடு எப்படி இருக்கு?

Yogi Babu's Chutney Sambar Web Series Released!! How was the first episode?
06:02 PM Jul 26, 2024 IST | Mari Thangam
ott யில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்     முதல் எபிசோடு எப்படி இருக்கு
Advertisement

தமிழ் திரையுலகில் அழுத்தமான அதே நேரம் நகைச்சுவை அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதா மோகன். அவரது இயக்கத்தில் 'சட்னி-சாம்பார்' என்னும் இணைய தொடர் உருவாகியுள்ளது. இதில், நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ளார். வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

Advertisement

இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தத் சீரிஸில் நிழல்கள் ரவி, மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், வெளியானது முதலே, தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. இந்நிலையில், சட்னி சாம்பார் வெப் தொடர் இன்று ஓடிடியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இரண்டு உணவகங்களுக்கு இடையே நடக்கும் போட்டியே இந்த தொடரின் மையக்கருத்தாக உள்ளது. ராதா மோகனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சட்னி சாம்பார்’ தொடர் முதல் எபிசோடிலேயே கதை ஆரம்பித்து நகைச்சுவை, சென்டிமென்ட் , விறுவிறுப்பு என அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.

Read more ; Reserve Bank of India-வில் வேலைவாய்ப்பு..!! சம்பளம் ரூ.1,39,550 வரை..!! விண்ணப்பிக்க நீங்கள் ரெடியா..?

Tags :
Advertisement