For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாணவனை நம்பி சென்ற ஆசிரியை; ஆடைகளை கழற்றி, மண்ணுக்குள் புதைப்பு.. மீண்டும் உயிரோடு வந்ததால் அதிர்ச்சி!!!

yoga teacher was buried alive in karnataka
07:49 PM Nov 09, 2024 IST | Saranya
மாணவனை நம்பி சென்ற ஆசிரியை  ஆடைகளை கழற்றி  மண்ணுக்குள் புதைப்பு   மீண்டும் உயிரோடு வந்ததால் அதிர்ச்சி
Advertisement

கர்நாடக மாநிலம் சிக்பலாபூர் மாவட்டம் சித்திலகட்டா தாலுக்கா திட்பூரஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர், 32 வயதான அர்ச்சனா. யோகா டீச்சரான இவர், தினமும் பலருக்கு யோகா கற்று தருகிறார். அப்படி இவரிடம் யோகா கற்றுக்கொள்ள வந்த நபர் ஒருவரின் மனைவி தான் பிந்து. இவர் தனது கணவருக்கும் யோகா டீச்சர் அர்ச்சனாவிற்கும் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்று சந்தேகித்தார். இதனால், உண்மையை கண்டறிய பிந்து அவரது நண்பரான சதீஷ் ரெட்டியிடம் உதவி கேட்டுள்ளார். 34 வயதான சதீஷ், தனியார் துப்பறிவாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது. பிந்துவின் கோரிக்கையை ஏற்ற சதீஷ், அர்ச்சனாவின் யோகா வகுப்பில் மாணவனாக சேர்ந்துள்ளார்.

Advertisement

அர்ச்சனாவிடம் நன்றாக பழகிய சதீஷ், அர்ச்சனாவிடம் அருகில் உள்ள வனப்பகுதியில் யோகா செய்ய அருமையான இடம் உள்ளது என்னுடன் வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அர்ச்சனாவும், சிக்பலாபூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவனஹள்ளி வனப்பகுதிக்கு சதீஷுடன் காரில் சென்றுள்ளார். பாதி தூரம் சென்ற பிறகு, 28 வயதான ரமணா, 35 வயதான நாகேந்திரா ரெட்டி, 27 வயதான ரவிச்சந்திரா மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர் ஒருவர் என நான்கு பேர் காரில் ஏறியுள்ளனர். பின்னர், 5 ஆண்களும் சேர்ந்து அர்ச்சனாவின் ஆடைகளை கிழித்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

மேலும், பிந்துவின் கணவருடன் இனி நீ தொடர்பு வைக்க கூடாது என்று மிரட்டி, தாங்கள் கொண்டு சென்ற கயிற்றால் அவரின் கழுத்தை நெருக்கியுள்ளனர். அப்போது அர்ச்சனா, தனது மூச்சை உள்ளடக்கி உயிரிழந்தது போல் நடித்துள்ளார். இதனால் அவர் இறந்து விட்டதாக கருதிய கும்பல், அவரது நகைகளை எடுத்து விட்டு, அருகில் இருந்த குழியில் புதைத்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். சிறிது நேரம் கழித்து, தன்னை கடத்தி வந்த கும்பல் அங்கிருந்து சென்றதை உறுதி செய்த அர்ச்சனா, புதைத்திருந்த இடத்தில் இருந்து வெளியேறியுள்ளார். மேலும், அவர் அருகில் இருந்த கிராமத்திற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் ஆடைகளை வாங்கி உடுத்தி உள்ளார்.

பின்னர், ஷிட்லகாட்டா அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், போலீசார் பிந்து உள்ளிட்ட ஆறு நபர்களையும் கைது செய்தனர். அதில், 18 வயதிற்குள் இருந்த இளைஞனை மட்டும் சிறார் காப்பகத்திற்கு அனுப்பி விட்டு, மற்ற ஐந்து குற்றவாளிகளையும் சிறையில் அடைத்தனர்.

Read more: கவனம்!!! ஒரே போன் காலில், ரூ.17 லட்சத்தை இழந்த நடிகை..

Tags :
Advertisement