முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த எஸ் பேங்க்!! கதறும் ஊழியர்கள்!காரணம் இதுதான்!

Private lender Yes Bank has reportedly laid off hundreds of employees in a restructuring exercise. The layoffs reportedly happened across several vertices, from wholesale to retain, as well as the branch banking segment.
10:27 AM Jun 26, 2024 IST | Mari Thangam
Advertisement

முன்னணி வங்கி நிறுவனமான எஸ் வங்கி 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. வங்கியின் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக செலவுகளைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும், வரும் நாட்களில் வங்கியில் இதுபோன்ற பணிநீக்கங்கள் அதிகமாக இருக்கலாம் என்று பலர் கணித்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 3 மாத சம்பளத்திற்கு இணையான இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக எஸ் பேங்கின் செய்தித் தொடர்பாளர்  கூறுகையில், "பணியாளர்களை மேம்படுத்துவதன் மூலம் நிறுவனம் செயல்திறனுடன் செயல்படுவதை எதிர்பார்க்கிறது. ஒரு பன்னாட்டு ஆலோசகரின் ஆலோசனையின் பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும், எங்கள் முயற்சியில், நாங்கள் செயல்படும் விதம் மற்றும் எங்கள் பணியாளர்களை மேம்படுத்தும் விதத்தை அவ்வப்போது முழுமையாக மதிப்பாய்வு செய்கிறோம் எனத் தெரிவித்தார்.

2023 மற்றும் 2024 நிதியாண்டுகளுக்கு இடையில், இந்நிறுவனத்தின் ஊழியர்களின் செலவுகள் 12 சதவீதத்திற்கு மேல் அதிகரித்ததால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  2023 நிதியாண்டின் இறுதியில் ரூ.3,363 கோடியிலிருந்த செலவுகள், 2024 நிதியாண்டின் இறுதியில் ரூ.3,774 கோடியாக உயர்ந்துள்ளது. 

தற்போதைய நிர்வாக இயக்குநரான பிரசாந்த் குமார் 2020 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றபோதும், இதேபோன்ற பணிநீக்க நடவடிக்கையை எஸ் பேங்க் நிர்வாகம் மேற்கொண்டது. அந்த காலகட்டத்தில் சரிவை சந்தித்து வந்த எஸ் பேங்க், ரிசர்வ் வங்கி தலையிட்டு மேற்கொண்ட நடவடிக்கைகளால் மீண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more; பாலாற்றின் குறுக்கே ஆந்திர முதல்வர் புதிய தடுப்பணை…! ஆபத்தில் 5 மாவட்டம்..!

Tags :
employeesYes BankYes Bank layoffs
Advertisement
Next Article