இன்று 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!! 5 டிகிரி கூடுதல் வெப்பம்..!! குழந்தைகள் பத்திரம்..!!
தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி வரை கூடுதலாக வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கத்தரி வெயில் துவங்குவதற்கு முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், இன்று தமிழகத்தின் 18 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட 5 டிகிரி வரை மேலும் அதிகரிக்கும் என்று மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பத்தூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! தமிழ்நாட்டில் 100% கோதுமையால் தயாரான பீர்..!! விலை எவ்வளவு தெரியுமா..?